Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!

Published : Jun 30, 2026, 08:20 AM IST

Siragadikka Aasai Serial 30 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணியை சந்தித்து பேசியுள்ள விஜயா, அவரை சரமாரியாக திட்டி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவை சந்திக்க பார்வதி வீட்டுக்கு வந்துள்ள ரோகிணி, அவரிடம் நீங்கள் 5 லட்சம் பணத்தை கொடுத்தால் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுகிறேன் என சொல்கிறார். உன்னை எல்லாம் நம்ப முடியாது நீ முதலில் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடு அதுக்கப்புறம் பணத்தை தருகிறேன் என கூறுகிறார். ஆனால் ரோகிணி இதனை ஏற்க மறுக்கிறார். நான் முதலில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் அந்தப் பணம் எனக்கு வரும் என்பதில் என்ன கேரன்டி, உங்க குடும்பத்தில் எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை குறிப்பாக உங்கள் மீது நம்பிக்கை இல்லை என கூறுகிறார் ரோகிணி.

Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்

25
ரோகிணி உடன் சண்டைபோட்ட விஜயா

நீங்க பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டாள் என்ன செய்வது என ரோகிணி கேட்டதும் கடுப்பாகும் விஜயா, அடி செருப்பால நான் ஏமாத்துறவளா, ஏமாற்றுவதெல்லாம் உன் வேலை. உன் அளவுக்கு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. இவளை மாதிரி ஏமாத்துறவ இந்த உலகத்திலேயே இல்லை. எப்படி பேசுறா பாரு கேடு கெட்டவ, என ரோகிணியை வரம்பு மீறி திட்டுகிறார் விஜயா. உடனே அவரை தடுத்து நிறுத்தும் ரோகினி, கொஞ்சம் மரியாதையா பேசுங்க என சொல்கிறார். உனக்கெல்லாம் என்னடி மரியாதை வேண்டி இருக்கு, நான் ஏமாத்துவேன்னு சொல்ற, எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை செருப்பாலே அடிப்பேன் என சொல்கிறார் விஜயா. அதற்கு பதிலடி கொடுக்கும் ரோகிணி, நீங்க அடிச்சா வாங்கிட்டு இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க எனக் கூறுகிறார்.

35
மிரட்டிய ரோகிணி

தேவையில்லாமல் எதையும் பேச வேண்டாம் எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விடுங்கள் நான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறேன் எனக் கூறுகிறார் ரோகிணி. என் புள்ளைக்கு கோடி கோடியா பணம் கொட்ட போகுது, உன் 5 லட்சத்தை தரேன் ஒழுங்கு மரியாதையா கையெழுத்து போட்டு ஓடிப் போயிரு என கூறுகிறார் விஜயா. பணத்தைக் கொடுத்தா டைவர்ஸ் கொடுக்கிறேன் இல்லேன்னா நீங்க கோர்ட்டுக்கு அலைஞ்சிகிட்டு தான் இருக்கணும் என ரோகிணி சொன்னதும், என்னடி மிரட்டுரியா என கூறி அவரை அடிக்கப் போகிறார் விஜயா. இப்போது அங்கிருந்த பார்வதி விஜயாவை தடுத்து நிறுத்துகிறார். நீ முதல்ல பணத்தை ரெடி பண்ணு என பார்வதி சொன்னதும் சீக்கிரமே அவன் மூஞ்சில தூக்கி எறியுரேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் விஜயா.

45
மனோஜுக்கு பேராசை

மறுபுறம் மனோஜின் ஷோரூமில் நியூமராலஜிஸ்ட் அமர்ந்திருக்க அவரிடம் தனக்கு குழப்பமாக இருக்கிறது என சொல்லும் மனோஜ், அவரிடம் ஒரு ஐடியா கேட்கிறார். நான் இரண்டு மனைவிகளுடன் வாழலாமா என கேட்கிறார். அதற்கு அந்த நியூமராலஜிஸ்டும் தாராளமா வாழலாம் என சொல்ல, மனோஜ் தன் மனதில் ரோகிணி மற்றும் கனகா இருவரையும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிறார். அந்த ஐந்து லட்சம் பணத்தை கனகாவின் அம்மாவிடம் இருந்து அட்வான்ஸ் ஆக வாங்கி ரோகினி இடம் கொடுத்து விடுங்கள் என ஜீவா ஐடியா கொடுக்க, மனோஜ் அதைப் பற்றி யோசிக்கிறார். விஜயா கோபத்தில் வீட்டுக்கு வந்து ரோகினி சந்தித்த விஷயத்தை சொல்கிறார்.

55
விஜயாவுக்கு செக் வைத்த அண்ணாமலை

அது மட்டும் இன்றி ஐந்து லட்சம் பணத்தை கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்கிறேன் என ரோகிணி சொன்னதை அண்ணாமலையிடம் கூறும் விஜயா, அந்தப் பணத்தை எப்படியாவது முத்துவும் மீனாவும் தான் ரெடி பண்ணி கொடுக்க வேண்டும் என கேட்கிறார். அதைக் கேட்டதும் கடுப்பான அண்ணாமலை ஏற்கனவே வீட்டை மீட்க அவன் வாங்கிய கடனை அவன் கட்டிக்கிட்டு இருக்கான். இப்போ புதுசா வேற கடன் வாங்க சொல்றியா. இந்த அஞ்சு லட்சத்தை உன் புள்ள மனோஜ ரெடி பண்ண சொல்லு இவங்க அதில் தலையிட மாட்டாங்க எனக் கூறி விடுகிறார் அண்ணாமலை. இதை அடுத்து என்ன ஆனது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories