Top 5 Diwali Blockbusters of Thalapathy Vijay: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, வசூலை வாரி சுருட்டிய 5 சூப்பர் ஹிட் விஜய் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக மாறியவர் தான் தளபதி விஜய். இவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் அறிமுகமானபோது, இவரை வரவேற்று வாழ்த்தியவர்களை விட விமர்சனம் செய்தவர்களே அதிகம். அப்பா ஒரு இயக்குனர் என்பதால் மட்டுமே நடிக்க வந்துவிட்டார். இந்த பையன் எல்லாம் எங்க சினிமாவில் தாக்கு பிடிக்க போறான் என நாக்கு மீது பல்லை போட்டு எழுதி தள்ளிய பத்திரிக்கைகள் ஏறலாம்.
25
அரசியல் பிரவேசம்:
தன்னை பற்றிய விமர்சனங்களை தாங்கிக்கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய வெற்றியை தமிழ் சினிமாவில் பதித்தார் விஜய். இன்று உலக அளவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளார். அதே போல் இன்று ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயர்ந்துள்ளார். நடிப்பில் உச்சம் தொட்டுவிட்ட விஜய்... கடந்த ஆண்டு அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்த நிலையில், இப்போது முழு அரசியல் வாதியாக மாறி இருக்கிறார்.
35
ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்:
அரசியலில் கால் பதித்து விட்டதால், எச் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தன்னுடைய கடைசி படம் என்பதையும் அறிவித்துள்ளார். மேலும் பல தீபாவளி கொண்டாட்டங்களின் ரசிகர்களின் கண்களுக்கு மதப்பூவாய் ஜொலித்த தளபதியின் படங்கள் இனி வரப்போவதில்லை என்பது ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. இந்த ஆண்டு தளபதி படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்றாலும், அவர் நடித்து முடித்துள்ள ஜனநாயகன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
45
விஜய்யின் தீபாவளி ரிலீஸ்:
இதெல்லாம் ஒருபுறம் இருக்கும் நிலையில், தற்போது தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி ஹிட் அடித்து வசூலை வாரி சுருட்டிய 5 படங்கள் பற்றி பார்க்கலாம். இதுவரை விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை குறிவைத்து பகவதி, திருமலை, வேலாயுதம், துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்க்கார், பிகில், மற்றும் லியோ ஆகிய 9 படங்கள் வெளியாகி உள்ளன.
55
டாப் 5 வசூல் செய்த படங்கள்:
இதில் டாப் 5 வசூலை பெட்ரா படங்களில், 'துப்பாக்கி' 5-ஆவது இடத்தில் உள்ளது. 'துப்பாக்கி' திரைப்படம் ரூ.115 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 4-ஆவது இடத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த மற்றொரு படமான 'கத்தி' உள்ளது. இந்த படம் ரூ.120 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'சர்க்கார்' படங்கள் உள்ளன. இந்த இரு படங்களுமே ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதை தொடர்ந்து 4-ஆவது இடத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'பிகில்' படம் உள்ளது. இந்த படம் ரூ.300 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'லியோ' படம் தான் உள்ளது. இந்த படம் ரூ.600 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.