பிக்பாஸ் 9 சூடுபிடிக்கும் நேரத்தில்... இந்த வாரம் மூட்டையை காட்டியது யார் தெரியுமா?

Published : Oct 26, 2025, 03:04 PM IST

Bigg Boss 9 Shocking Elimination: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பல பிரச்சனைகளுடன் சூடு பிடித்து வரும் நிலையில், இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பதை பார்ப்போம்?

PREV
15
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ்:

விஜய் டிவியில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 9. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனை விட, விஜய் சேதுபதி இந்த முறை முதிர்ச்சியோடு போட்டியாளர்களை அணுகுவதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

25
இந்த வாரம் யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வெற்றிகரமாக, 1 மாதத்தை நெருங்கி வரும் நிலையில் இதுவரை மொத்தம் 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். முதல் வாரத்தில் நந்தினி 5 நாட்களிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக பிக்பாஸ்ஸிடம் அறிவித்த நிலையில், இவரை தொடர்ந்து எலிமினேஷன் மூலம் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் அபிசாரா வெளியேறிய நிலையில்... இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

35
நாமினேஷனில் சிக்கியவர்கள்:

இந்த வார நாமினேஷனில் வியானா, பிரவீன், சுபிக்‌ஷா, துஷார், கலை, ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர்சிக்கினர். இவர்களில் வியானா, பிரவீன் ராஜ், சுபிக்‌ஷா, துஷார் மற்றும் கலையரசன் ஆகியோர் கணிசமான வாக்குகள் பெற்றதன் காரணமாக சேப் சோனில் இருப்பதாகவும்,  ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகிய மூவரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்படுத்தது.

45
ஆதிரை வெளியேற்றப்பட்டுள்ளார்:

இந்த மூவரில் ஒருவர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என ஏற்கனவே நெட்டிசன்கள் கூறிவந்த நிலையில், நெட்டிசன்கள் கணிப்பு படியே தற்போது... பிக்பாஸ் வீட்டில் லவ் மூடில் சுற்றிக்கொண்டிருந்த ஆதிரை வெளியேற்றப்பட்டுள்ளார். FJ -வுடன் காதல் கன்டென்ட் கொடுக்க ஆதிரை தயாராக இருந்த போதும் பல சமயங்களில் ஆதிரையை FJ நிராகரித்தையும் பார்க்கமுடிந்தது. நேற்று விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டில் தைரியமான ஆள் யார் என கேட்டபோது கூட ஆதிரை FJ பெயரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

55
ஏமாற்றத்தில் ரசிகர்கள்:

மகாநதி சீரியல் மூலம் பிரபலமான ஆதிரை, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தாமல், FJ பின்னாடியே சுற்றி கொண்டும்... பிக்பாஸ் வீட்டில் எதுக்கெடுத்தாலும் சண்டை கோழியாக வலம் வந்தது தான் இவருடைய வெளியேற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. காதல் கன்டென்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆதிரையின் வெளியேற்றம் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories