Vijay movie actress Mumaith Khan: தமிழில் ஒரு சில படங்களில் நடித்தும், கவர்ச்சி நடனம் ஆடியும் பிரபலமான முமைத் கான் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை முமைத் கான், ஒரு கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர். இவருடைய முழு பெயர் முமைத் அப்துல் ரஷித் கான் என்றாலும், சினிமாவிற்காக தனது பெயரை சுருக்கி கொண்டார். மும்பையை சேர்ந்த இவர், நடிகை என்பதை தாண்டி மாடல், மற்றும் நடன கலைஞராகவும் அறியப்படுகிறார்.
24
கதாநாயகியாக நடித்துள்ள முமைத் கான்:
40 வயசை சமீபத்தில் எட்டிய முமைத் கான், பெரும்பாலும் தெலுங்கு, இந்தி பட பாடல்களுக்கு “ஐட்டம்” டான்ஸ் ஆடியதன் மூலமாவே பிரபலமானார். அதே போல் தமிழில் கதாநாயகியாக 'பௌர்ணமி நாகம்' படத்திலும், பிரஷாந்த் நடித்த மம்முட்டியான், விஜய் நடித்த வில்லு ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக முமைத் கான் கந்தசாமி படத்தில் ஆடிய 'ஏன் பேரு மீனா குமாரி' பாடல் செம்ம ஹிட் அடித்தது.
34
பிக்பாஸ் தெலுங்கு:
பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இவர் திறமையாக விளையாடியபோதும் டைட்டிலை வெல்ல முடியாமல் போனது. சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
44
ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்:
இந்நிலையில், தான் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியபோது, சமீபத்தில் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு முழு ஓய்வில் இருந்து வருகிறேன். இந்த விபத்துக்கு முன்னர் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்தேன். ஆனால் தற்போது நான் டேட்டிங் செய்த யாருடனமும் தொடர்பில் இல்லை. தனிமையில் வசதியாக வாழ்ந்து வருகிறேன். தனக்கு பிடித்த ஒருவரை பார்த்தல் திருமணம் செய்து கொள்வது பற்றி முடிவு செய்வேன் என கூறியுள்ளார். முமைத் கான் கூறிய இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.