ரஜினியுடன் ஒரு முறை கூட ஜோடி சேர்ந்து நடிக்காத கமல் பட நடிகைகள் ஒரு பார்வை

Published : Jul 02, 2025, 11:30 AM IST

நடிகர் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகைகள் சிலர் ஒரு படத்தில் கூட ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்ததில்லை. அந்த நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

PREV
16
Kamal Movie Actress Never Paired With Rajinikanth

1980களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் ஊர்வசி. யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஊர்வசி, நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் கமல் - ஊர்வசி இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. குறிப்பாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலில் இருவரும் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். இப்படி கமலுடன் மாஸ்டர் பீஸ் படத்தில் நடித்த ஊர்வசி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

26
ஊர்வசி

36
தேவையானி

குடும்பப் பாங்கான வேடங்களில் கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகை என்றால் அது தேவையானி தான். 1990களில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த தேவையானி, கமல்ஹாசன் உடன் இணைந்து தெனாலி, பஞ்ச தந்திரம் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இவர் ஒருமுறை கூட சூப்பர்ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. ரஜினிக்கு ஜோடியாக தனக்கு வாய்ப்பு வராதது வேதனை அளித்ததாக அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

46
சுகன்யா

1990களில் கோலோச்சிய நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர். இவர் எந்த ஒரு வேடம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுப்பார். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியன் திரைப்படம். அதில் வயதான வேடத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சுகன்யா. அதுமட்டுமின்றி கமலுடன் மகாநதி படத்திலும் நடித்திருந்தார் சுகன்யா. இந்த இரண்டு படங்களில் கமலுடன் நடித்த சுகன்யா, ஒருமுறை கூட ரஜினியுடன் நடிக்கவில்லை.

56
அசின்

பாலிவுட் படங்களுக்கு ஆசைப்பட்டு தமிழ் சினிமா வாய்ப்பை இழந்தவர் தான் அசின். இவர் தமிழில் குறுகிய காலம் மட்டுமே நடித்தாலும். அந்த காலகட்டத்தில் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல் அவரின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால் அது கமல்ஹாசனின் தசவதாரம். அப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அசின், அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகியதால், ரஜினி உடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

66
சினேகா

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத மற்றொரு முன்னணி நடிகை என்றால் அது சினேகா தான். இவர் கமல்ஹாசன் உடன் இணைந்து வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் இவர் நடித்த பாப்பு என்கிற கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படி கோலிவுட்டின் டிரெண்டிங் ஹீரோயினாக நடித்து வந்த சினேகா ஒரு முறை கூட ரஜினி உடன் இணைந்து நடிக்கவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories