ஹீரோஸ் நீங்க கொஞ்சம் ஓரமா போங்க.. நெட் ஒர்தில் நாயகர்களை மிஞ்சிய டாப் 4 வில்லன் நடிகர்கள்!

First Published Sep 19, 2024, 5:42 PM IST

Wealthy Villain Actors : தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாயகர்களுக்கு நிகரான புகழோடு வலம் வருபவர்கள் தான் வில்லன் நடிகர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Ashish Vidyarthi

புதுடெல்லியில் பிறந்து, ஹிந்தி மொழி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமானவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. கடந்த 1991ம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான "கால் சந்தியா" என்கின்ற திரைப்படத்தின் மூல ம் தான் இவர் தனது தலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய நான்கு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தனது கலை உலக பயணத்தின் பத்தாம் ஆண்டில் பயணித்த போது தான், தமிழ் மொழியில் நடிக்க தொடங்கினார். கடந்த 2001ம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் தமிழில் வெளியான "தில்" திரைப்படம் தான் இவர் கோலிவுட்டில் அறிமுகமான முதல் திரைப்படம். அந்த முதல் படத்திலேயே, வில்லன் கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து அசத்தி தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இவர் பெற்றார்.

தொடர்ச்சியாக இப்போது வரை திரைப்படங்களில் நடித்து வரும் ஆஷிஷ் வித்யார்த்தி, இந்திய மொழிகள் பலவற்றில் டாப் வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் இணைய தொடர்களிலும் இவர் நடிப்பதுண்டு. படத்திற்கு பல லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஆசிஷ் வித்யார்த்தி, சுமார் 90 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது.

என்ன ஸ்ரீவித்யா குத்து பாட்டு பாடிருக்காங்களா? எந்த பாடல்? இந்த சம்பவத்தை செய்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Rana Daggupathi

சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான டக்குபதி - அக்கினேனி குடும்பத்தை சேர்ந்தவர் தான் ராணா டக்குபதி. தெலுங்கு மொழி சூப்பர் ஸ்டாரான வெங்கடேஷ் மற்றும் பிரபல நடிகர் நாக சைதன்யாவும் இவருக்கு நெருங்கிய உறவினர்கள் தான். சிறு வயது முதலே பணக்கார குழந்தையாக வளர்ந்து வந்த ராணா டக்குபதி, இப்பொது "ஸ்பிரிட் மீடியா" என்கின்ற விசுவல் எபக்ட்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "லீடர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார். கடந்த 14 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வில்லனாக பல படங்களில் அசத்தி வருகின்றார். 

ராணா டக்குபதியை பொருத்தவரை தான் ஒப்புக் கொள்ளும் திரைப்படங்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஆறு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். தற்பொழுது இவருடைய சொத்து மதிப்பு சுமார் 45 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் அவருடைய "ஸ்பிரிட் மீடியா" நிறுவனத்தின் சொத்துக்கள் அடங்கியுள்ளதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

Latest Videos


Daniel Balaji

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக பயணித்த முரளியின் உறவினர் தான் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி. தொடக்க காலத்தில் திரைப்படங்களில் "யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக" பணியாற்றி வந்த இவர், உலகநாயகன் கமல்ஹாசனின் "மருதநாயகம்" திரைப்படத்திலும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது கலை வாழ்க்கையை சின்னத்திரையில் ஒளிபரப்பான "சித்தி" என்ற நாடகத்தின் மூலம் தொடங்கிய இவர், கடந்த 2002ம் ஆண்டு தமிழில் வெளியான "ஏப்ரல் மாதத்தில்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். 

தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வந்த டேனியல் பாலாஜிக்கு கடந்த 2006ம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான "வேட்டையாடு விளையாடு" என்கின்ற திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தொடர்ச்சியாக தமிழில் "பொல்லாதவன்", "வடசென்னை" போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. பெரிய அளவில் புகழோடு வளம் வந்து கொண்டிருந்த டேனியல் பாலாஜிக்கு சுமார் 12 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்துள்ளது, இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி சென்னையில் தனது இல்லத்தில் இருந்த போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இவர் காலமானார்.
 

Prakash Raj

கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் கடந்த 1988ம் ஆண்டு கலை உலகில் அறிமுகமானவர் தான் பிரகாஷ்ராஜ். கடந்த 37 ஆண்டுகளாக இவர் இந்திய திரை உலகின் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. தமிழ் மொழியை பொறுத்தவரை 1994ம் ஆண்டு வெளியான பிரபுவின் "டூயட்" திரைப்படம் தான் இவருக்கு மிகச்சிறந்த கோலிவுட் என்ட்ரியை கொடுத்தது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவ்வப்போது அவர் நடித்து வந்தாலும் மிகப்பெரிய வில்லன் நடிகராக ஆரம்ப காலத்தில் இருந்து மிரட்டி வருபவர் பிரகாஷ்ராஜ் மட்டுமே. 

அரசியல் ரீதியான கருத்துக்களை மிகவும் போல்டாக பேசி வரும் இவர், இப்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இவர் திகழ்ந்து வருகின்றார். அதிக அளவில் தொடர்ச்சியாக படங்களை நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு சராசரியாக 2.5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

அது என் பர்சனல்! நேர்காணலில் மைக்கை தூக்கி போட்டுவிட்டு வெளியேறிய நடிகர் தனுஷ்!

click me!