என்ன ஸ்ரீவித்யா குத்து பாட்டு பாடிருக்காங்களா? எந்த பாடல்? இந்த சம்பவத்தை செய்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?

First Published | Sep 19, 2024, 4:42 PM IST

Actress Srividya : தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி டாப் நடிகையாக வலம்வந்தவர் தான் ஸ்ரீவித்யா.

Actress Srividya

சென்னையில் பிறந்து வளர்த்து தனது 14வது வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரீவித்யா. இவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி, காமெடி நடிகராக வலம்வந்தார். அதுமட்டுமல்ல ஸ்ரீவித்யாவின் தாய் ஒரு சிறந்த கர்நாடக இசை பாடகர் ஆவார். தமிழில் கடந்த 1967ம் ஆண்டு வெளியான "திருவருட்செல்வர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரீவித்யா. தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த இவர் பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக வலம்வந்தார். 

வெகு சில ஆண்டுகளிலேயே நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா, என்ன தான் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த நடிகையாக இருந்தாலும், இவர் தமிழ் மொழியை காட்டிலும் அதிக அளவிலான திரைப்படங்களை நடித்து மலையாளம் மொழியில் தான். ஒரு கட்டத்தில் மலையாள பெண்ணாகவே இவர் மாறிவிட்டார் என்றால் அது மிகையல்ல. தமிழ் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி என்கின்ற ஒரு விஷயத்தை தனது திரை வரலாற்றிலேயே பெரிய அளவில் கையாலாத வெகு சில நடிகைகளில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். 

தமிழ் மொழியை பொறுத்தவரை இறுதியாக கடந்த 2005ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான லண்டன் என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கரெண்ட் கட் ஆன பின்... இளையராஜா இருட்டில் ஆரம்பித்த பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா?

Kollywood Actress Srividya

இசை பயணம் 

நடிப்பை பொறுத்தவரை தனது கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்து அசத்தி வந்த ஸ்ரீவித்யா, ஒரு மிகசிறந்த கர்நாடக இசை படகியுமாவார். தனது தாயிடம் இருந்து இளம் வயதிலேயே கர்நாடக இசையை கற்க தொடங்கினார் ஸ்ரீவித்யா. திரைப்படங்களில் பெரிய அளவில் பாடவில்லை என்றாலும், மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் ஒரு சில பாடல்களை இவர் பாடியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் திரை உலகை தாண்டி பல மேடை கச்சேரிகளில் இவர் தனது பாடல் திறமையை வெளிக்காட்டியுள்ளார். 

காரணம் இவருடைய தாய் எம்.எல் வசந்தாகுமாரி தான். எம் எஸ் சுப்புலட்சுமி, டி கே பட்டம்மாள் போன்ற பல முன்னணி பாடகிகளுக்கு இணையாக புகழ்பெற்ற ஒரு பாடகி வசந்தாகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தனது தாய் அளவிற்கு இல்லை என்றாலும், நேரிதியாக கர்நாடக இசையை பாடக்கூடிய வல்லமை படைத்தவர் ஸ்ரீவித்யா. ஆனால், தானால் கர்நாடக இசை பாடல்கள் மட்டுமல்ல, துள்ளல் இசைக்கும் பாடல்களை பாட முடியும் என்று நிரூபித்த ஒரு மாபெரும் நடிகை ஸ்ரீவித்யா.

Tap to resize

Amaran

அமரன் திரைப்படம்

கடந்த 1992ம் ஆண்டு "நவரச நாயகன்" கார்த்திக் மற்றும் பானுப்பிரியா நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை இயக்கியது ராஜேஷ்வர் என்பவர் தான். அது மட்டுமல்லாமல், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள், இதில் பல பாடல்களை பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் எழுதிய நிலையில், இரண்டு பாடல்களை மட்டும் வைரமுத்து எழுதியிருந்தார். 

இது ஒருபுறம் இருக்க இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் தான், தமிழ் திரையுலகில் முதல் முறையாக நடிகை ஸ்ரீவித்யாவை பாடகியாக, அதுவும் குத்து பாட்டு பாடும் ஒரு பாடகியாக அறிமுகம் செய்தார். அமரன் படத்தில் ஒலித்த "ட்ரிங் ட்ரிங்" என்ற குத்து பாடல் இன்றளவும் பலரும் மத்தியில் பிரபலம். உன்னிப்பாக கவனித்தால் இந்த பாடலை பாடியது ஸ்ரீவித்யா என்பது நமக்கு தெரிய வரும். மேலும் இந்த திரைப்படத்தில் வந்த "வெத்தல போட்ட சோக்குல" என்கின்ற பாடலை நவரச நாயகன் கார்த்தி அவர்களே தனது சொந்த குரலில் பாடி இருப்பார்.

Kamal haasan

மறைந்த மாமேதை 

தனது சிறந்த நடிப்பாலும், அருமையான குணத்தாலும் தமிழ் மற்றும் மலையாள மொழி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு பயணித்து வந்த நடிகை தான் ஸ்ரீவித்யா. இளம் வயதில் பிரபல நடிகர் கமல்ஹாசனோடு மலர்ந்த காதல் கைகூடாமல் போக, தனது பெற்றோர் கைகாட்டிய நபரை திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கை மற்றும் திரை பயணத்தை தொடர்ந்தார். 

இளம் வயதிலேயே வயதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கிய ஸ்ரீவித்யாவிற்கு அவருடைய கணவரின் நடத்தை மிகப்பெரிய இடியாக வந்து விழுந்தது. ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டு, மீண்டும் இழந்த தன் வாழ்க்கையை ஸ்ரீவித்யா தொடங்கினார். அப்போது தான் அதிக அளவில் அவர் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே தொழில், வீடு, திருமணம் என்று இருந்த ஸ்ரீவித்யா தன் உடலை பெரிய அளவில் கவனித்துக்கொள்ளவில்லை. இந்த சூழலில் தான் கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 53 வது வயதில் அவர் காலமானார்.

அது என் பர்சனல்! நேர்காணலில் மைக்கை தூக்கி போட்டுவிட்டு வெளியேறிய நடிகர் தனுஷ்!

Latest Videos

click me!