"பஞ்சமி முதல் விடாது கருப்பு வரை" 90ஸ் கிட்ஸ்களை மிரள வைத்த டாப் 4 நாடகங்கள்!

Ansgar R |  
Published : Aug 24, 2024, 10:13 PM IST

Thriller Serials : இன்று அங்கிள்கள் ஆகிவிட்ட 90களின் குழந்தைகளை, சும்மா மிரட்டவிட்ட சீரியல்கள் ஏராளம். அதில் டாப் 4 பற்றி இந்த பதிவில் காணலாம்.

PREV
14
"பஞ்சமி முதல் விடாது கருப்பு வரை" 90ஸ் கிட்ஸ்களை மிரள வைத்த டாப் 4 நாடகங்கள்!
Panjami Old Serial

இன்றைய காலகட்டத்தில் சீரியல்கள் எல்லாமே ஒரே விதமான கதையைத் தான் கொண்டிருக்கிறது. பாத்திரங்களின் பெயர்களும், கதை நடக்கும் இடமும் தான் அவ்வப்போது சற்று மாறுகிறது என்று ரசிகர்கள் பரவலாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். 

ஆனால் 90களின் ஆரம்பத்தில் சீரியல்களின் நிலையே வேறு, அதை நிரூபித்த பல சீரியல்களில் ஒன்றுதான் "பஞ்சமி". காடுகளில் வாழும் மக்களை குறித்து எடுக்கப்பட்ட ஒரு சீரியல், மாலை நேரமானாலே இருள் சூழ்ந்து பஞ்சமியின் வேட்டை துவங்கிவிடும். இதை ரசித்து பார்க்காத 90களின் குழந்தைகளே இல்லை என்றே சொல்லலாம்.

ஜீ தமிழ் தொடரில் இருந்து விலகிய ஹீரோயின்; சீரியலுக்கு வரும் அஜித் பட நடிகை யார் தெரியுமா?

24
Vidathu Karuppu

"விடாது கருப்பு".. இன்று பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து அசத்தி வரும் சேத்தன் முதல் முறையாக அறிமுகமான சீரியல் இதுதான். "ஸ்பிலிட் பர்சனாலிட்டி" என்று சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசிய ஒரு சீரியல் இது. பிரபல நடிகர் அஜய் ரத்தினமும் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சஸ்பென்ஸ் கலந்த ஒரு திகில் சீரியலாக பல ஆண்டுகள் தொடர்ந்து இந்த நாடகம்.

34
Rudhira Veenai

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நாடகங்களில் ஒன்று தான் "ருத்ரவினை". இது ஒரு பிரபல நாவலை தவுலி எடுக்கப்பட்ட ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் நாடகம். 300 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த ருத்ர வீணை, 2002ம் ஆண்டு மீண்டும் ஒரு கிராமம் முழுவதும் இசைக்கப்படுகிறது. விசித்திரமான பல சம்பவங்கள் அந்த வீணையை இசைத்தால் நடைபெறும். மேலும் பிற சீரியல்களில் இல்லாத ஒரு சிறப்பு இதில் உள்ளது, அது என்னவென்றால் இப்பொழுதும் ராடன் மீடியாவின் youtube சேனலில் இந்த ருத்ரவினை சீரியலை உங்களால் பார்க்க முடியும்.

44
Jenmam X

இன்று புகழின் உச்சியில் இருக்கும் விஜய் டிவி ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் பிரபலம் அடைய காரணமாக இருந்த முதல் நிகழ்ச்சி "ஜென்மம் எக்ஸ்". ஆயிரம் பேய்களில் ஒருவித பேய் தான் ஜென்மம் X.. என்று இந்த சீரியலின் டைட்டில் பாடலை கேட்டாலே பலருக்கும் கதி கலங்கும் இன்னும் சொல்லப்போனால் இந்த சீரியலை பார்த்து காய்ச்சலில் விழுந்த குழந்தைகள் கூட உண்டு.

பட்டுப்படவையில் ராணி போல் ஜொலிக்கும் அனிதா சம்பத்.. க்யூட் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories