Published : Aug 24, 2024, 08:21 PM ISTUpdated : Aug 24, 2024, 08:23 PM IST
நடிகை ரேவதி தன்னுடைய 47 வயதில், டெஸ்ட் டியூப் மூலம் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், தற்போது ரேவதியின் மகள் மகியின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மண்ணில் பிறந்தாலும், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை ரேவதி. 80-பது மற்றும் 90-களில், ரஜினிகாந்த், கமல், பிரபு, விஜயகாந்த், மோகன், சத்யராஜ், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ரேவதி.
27
Revathi Debut Manvaasanai
இந்த திறமையான நடிகையை, தமிழ் சினிமாவில் 'மண்வாசனை' படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாரதிராஜா தான். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாத நடிகை என பெயர் எடுத்த ரேவதி, தமிழில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தவர்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல நடிகரும், ஒலிப்பதிவாளருமான சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்த ரேவதி, வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.
47
Revathi Test Tube Baby
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் மேனனிடம் இருந்து 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நடிகை ரேவதி, தனக்கென ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணி... தன்னுடைய 47 வயதில் டெஸ்ட் டியூப் மூலம் அழகிய மகள் ஒருவரை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மகி என பெயரிட்டு, தன்னுடைய உலகமே அந்த குழந்தை தான் என தற்போது வாழ்ந்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்னர், திருமண முறிவு குறித்தும், குழந்தை பெற்றுக் கொண்டது குறித்தும் கூறிய நடிகை ரேவதி, திருமண வாழக்கையில் பல பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் இனியும் இந்த உறவை பிடித்து வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என எண்ணி பரஸ்பரமாக பிரிய முடிவு செய்தோம்.
67
Revathi Wish Girl Baby
திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த பின்னர்... எனக்கென ஒரு குழந்தை வேண்டும் என எண்ணினேன். எனவே பலர் நான் குழந்தையை தத்தெடுத்து தான் வளர்க்கிறேன் என நினைக்கிறார்கள். ஆனால் மகி நான் பெற்றெடுத்த மகள் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மகிக்கு தற்போது 11 வயதாகும் நிலையில், ரேவதி தனது மகளை கேமரா முன் கொண்டு வராமல் பொத்தி பொத்தி பார்த்து வளர்த்து வருகிறார். ஆனால் நடிகை ரேகா, அம்பிகா ஆகியோருடன் திருமண கொண்டாட்டம் ஒன்றில் ரேவதி மகளுடன் கலந்து கொண்டபோது எடுத்து கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மகி, செம்ம கியூட்டாக... சுருட்டை முடியுடன், தங்க சிலை போல் உள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.