நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.! சமந்தாவால் பெத்த பிள்ளை நாக சைதன்யா மீது கடும் கோபத்தில் லட்சுமி டகுபதி!

First Published | Aug 24, 2024, 6:51 PM IST

நாக சைதன்யா - சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்ததில், சைதன்யாவுக்கு அவரின் அம்மா லட்சுமிக்கு துளியும் விருப்பம் இல்லாத நிலையில், முன்னாள் மருமகள் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டு, பெத்த பிள்ளை மீதே கோபத்தை வெளிப்படுத்தி வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் உலா வர துவங்கியுள்ளன.
 

Naga Chaitanya Samantha Divorce

நாகர்ஜூனாவுக்கும் அவரது முதல் மனைவியான லட்சுமிக்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா. ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சைதன்யா... கூடிய விரைவில் மீண்டும் புது மாப்பிள்ளையாக உள்ளார். 

Naga Chaitanya and Sobhita

நாக சைதன்யாவுக்கும், அவரது  காதலியான சோபிதா துலிபாலாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. எனவே இதனை உறுதி செய்யும் விதமாக, ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் நாகார்ஜுனா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை நாகார்ஜுனாவே புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்தார். 

சுதந்திர தினம்; தமிழ் நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட மரியாதை! போட்டோஸ்!
 

Tap to resize

Lakshmi Daggubati

இவர்கள் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அதிகம் பகிர பட்டன. இதில் நாகார்ஜுனா, அமலா, அகில், மற்றும் துலிபாலா குடும்பத்தினரின் புகைப்படங்களில் இருந்தாலும், தன்னுடைய மகனின் நிச்சயதார்த்தத்தில் லட்சுமி டகுபதி, மற்றும் அவரின் குடும்பத்தை சேர்ந்த யாருமே கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
 

Naga Chaitanya Mother

லட்சுமி டகுபதி நாகார்ஜுனாவை பிரிந்த பிறகு, அமெரிக்காவில் குடியேறினார் இரண்டாவது திருமணமும் செய்து கொண்ட நிலையில், படித்து முடிக்கும் வரை தன்னுடைய அம்மாவுடன் சைதன்யா இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் காட்ட துவங்கிய பின்னர் நாகர்ஜூனாவிடம் வந்து சேர்ந்தார். அமலா எந்த ஒரு பாகுபாடும் இன்றி நாக சைதன்யாவையும் தனது மகனாகவே பார்ப்பதாக பல முறை கூறியுள்ளார்.

ஏரி ஆக்ரமிப்பு; நடிகர் நாகார்ஜுனாவின் கட்டிடம் இடித்து தரைமட்டம்!
 

Samantha

இந்நிலையில்  மகனின் நிச்சயதார்த்த விழாவிற்கு தாய் லட்சுமி வராததற்கு வலுவான காரணம் இருப்பதாக தேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமந்தாவுடன் நாக சைதன்யா பிரிந்ததை லட்சுமி டகுபதி உண்மையில் விரும்பவில்லை என்றும் சமந்தாவை தன் மருமகளாக மனமுவந்து ஏற்று கொண்டது போல் சோபிதாவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 

Samantha

அதே போல் விவாகரத்து விவகாரத்தில், சமந்தா மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றும்,  நாக சைதன்யா மீது தான் தவறு இருப்பதாக லட்சுமி கருதுகிறார். தொடர்ந்து சமந்தாவுக்கு ஆதரவாகவே லட்சுமி டகுபதி இருப்பதால் பெற்ற பிள்ளையான நாக சைதன்யாவிடம் அவர் பேசுவது இல்லை என்றும்... அவர் மீது கடும் கோபத்துடன் தான் உள்ளதாக கூறப்படுகிறது.

மனைவியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு செக்! தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!
 

சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போது, லட்சுமி சமந்தாவை அக்கறையாக விசாரித்ததாக கூறப்படுகிறது, அதே போல் தொடர்ந்து சமந்தா மீதான தன்னுடைய அக்கறையையும் வெளிப்படுத்தி வருகிறாராம். சமந்தா மீதுள்ள அன்பினாலும், நாக சைதன்யா மீதுள்ள கோபத்தால் லட்சுமி டகுபதி, சைதன்யா - சோபிதா திருமணத்தில் கூட கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே சில தகவல்கள் கூறப்படுகிறது.
 

Latest Videos

click me!