சுதந்திர தினம்; தமிழ் நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட மரியாதை! போட்டோஸ்!

First Published | Aug 24, 2024, 5:39 PM IST

தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் விஷ்வாவுக்கு... அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்ள்ள புகைப்படங்கள் இதோ
 

Vijay Vishwa

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக உள்ள, நடிகர் விஜய் விஷ்வா 2012 ஆம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்தவர் பின்னர்  குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு,  'கேரள நாட்டிலம் பெண்களுடனே' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 

Vijay Vishwa

இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம், போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவரின் கைவசம் 'பிரம்ம முகூர்த்தம்', 'தரைப்படை', 'சாரா', 'பரபரப்பு' ஆகிய படங்கள் இருந்தாலும்... தன்னுடைய சமூக சேவையை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி செய்து வருகிறார்.

ஏரி ஆக்ரமிப்பு; நடிகர் நாகார்ஜுனாவின் கட்டிடம் இடித்து தரைமட்டம்!

Latest Videos


Vijay Vishwa

இதற்காக ஏற்கனவே பல்வேறு விருதுகளும், மரியாதைகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது அமெரிக்க தமிழ் சங்கம் இவரை சுதந்திர தினத்திற்கு வரவேற்று கவுரவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Vijay Vishwa

அதாவது குயின்ஸ், NY - ஆகஸ்ட் 2024 - நியூயார்க் தமிழ்ச் சங்க, தலைவர் கதிர்வேல் குமாரராஜா மற்றும் அவர்களின் நிர்வாகக் குழு, சமூக ஆர்வலர் மற்றும் குயின்ஸ் இந்தியா தின அணிவகுப்புக் குழுவின் தலைவர் கோஷி ஓ தாமஸ் ஆகியோருடன் இணைந்து, குயின்ஸில் ஒரு அற்புதமான இந்திய தின அணிவகுப்பை பெருமையுடன் ஏற்பாடு செய்தது. 

விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்த முக்கிய அம்சங்கள்!

Vijay Vishwa

Floral Park/Bellerose இந்திய வணிகர்கள் சங்கம், Inc. மற்றும் குஜராத்தி சமாஜ் ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வு, துடிப்பான கலாச்சார காட்சிகள் மற்றும் வலுவான சமூக உணர்வுடன் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

Vijay Vishwa

இதில் தமிழ் திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா கிராண்ட் மார்ஷலாக பணியாற்றினார், அணிவகுப்பை மிகுந்த உற்சாகத்துடன் வழிநடத்தினார். அவரது வருகை நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்ததாக அமெரிக்க தமிழர்கள் கூறினர்.

மாரி செல்வராஜின் 'வாழை' ரசிகர்கள் மனதை வென்றதா? முதல் நாள் வசூல் விவரம்!

Vijay Vishwa

மேலும் இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் நம் இந்திய கலாச்சாரம் அமெரிக்கர்கள் கண்களை கவர்ந்தது. அமெரிக்காவில் நடந்த விருது நிகழ்ச்சியில் இளம் பாரி என்கிற விருது விருது விஜய் விஷ்வாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த விருது விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சுகன்யா, வெங்கட் பிரபு, பிக் பாஸ் அர்ச்சனா, உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Vijay Vishwa

இது மட்டுமின்றி அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் விஜய் விஷ்வா கலந்து கொண்டதோடு... இன்னும் கலந்து கொள்ளவும் ஆயத்தமாகி உள்ளார். இவருடன் சுதந்திர தின நிகழ்வில் பிரபல நடிகரும் முன்னாள் எம்.பி-யான நெப்போலியனுக்கு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வசூலில் மாரியை வென்றாரா சூரி? கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!

Vijay Vishwa

ஒரு தமிழ் நடிகர் அமெரிக்காவில் நடந்த பல்வேறு சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாக இருக்கும் நிலையில், இது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்ததாகவே பார்க்கப்படுகிறது. 

Vijay Vishwa

இந்த நிகழ்ச்சியை, ஃபெட்னா தலைவர் - வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலசாமி நாதன், குயின்ஸ் பரேட் சேர்மன் கோஷி ஒ தாமஸ்,  நியூயார்க் தமிழ் சங்க தலைவர் குமாரராஜா கதிரவேல், டெனிஸ் தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் நெப்போலியன், வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சார்பில் மிஸ்டர் ராஜாராம்,  கலிபோர்னியா தமிழ் சங்கம் முருகேசன் கணபதி, டெனிஸ் தமிழ்ச் சங்கம் அன்பு, நியூ ஜெசி தமிழ்ச் சங்கத்தின் பொன் தாரணி, கனடா தமிழ்சங்கம் சிவராம வேலுபிள்ளை, தம்பா தேவா, அன்பு சுப்ரமணியன், ஹூயூஷ்டன்  ஹெலிகாம் அன்பு, நீபவள்ளி கான், சக்தி பெருமாள், மரியம் சிங், உள்ளிட்ட ஏராளமானோர்  இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக விஜய் விஷ்வா தெரிவித்துள்ளார்.

எல்லாம் என்னுடையது; கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் மார்னிங் வைப் பண்ணும் நயன்தாரா!

click me!