திரைப்பட பணிகள் ஒருபுறம், கட்சி பணிகள் ஒருபுறம் என்று மிகவும் பிசியான மனிதராக இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், தற்பொழுது மீண்டும் தனது திரைப்பட பணிகளை துவங்கி இருக்கிறார். விரைவில் இரு திரைப்பட பணிகளையும் முடிக்கும் அவர், தீவிர அரசியலிலும் ஈடுபட உள்ளார்.
இப்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த திரைப்படத்தில் மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் காட்சிகள் AI மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து அவரது குடும்பத்தினரை அண்மையில் சந்தித்து நன்றி கூறினார் தளபதி விஜய்.
34
Captain Vijayakanth
தனது கட்சி கொடியை அறிமுகம் செய்யும் முன், கொடியேற்ற நிகழ்வுக்கான ஒத்திகையை மேற்கொண்ட தளபதி விஜய், அங்கிருந்து நேராக புறப்பட்டு தனது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்பட குழுவினரோடு, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தாரை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.
44
DMDK Leader Premalatha
இந்நிலையில் தளபதி விஜயின் வருகை குறித்து பேசியுள்ள தேமுதிக தலைவர் பிரேமலதா, "விஜய் எனது வீட்டிற்கு ஒரு மகனைப் போலத்தான் வந்தார். கேப்டனுக்கு அவரை மிகவும் பிடிக்கும், எனது மகன்கள் கூட அவருடைய தீவிர ரசிகர்கள் தான். இதை நான் அவரிடம் சொன்னபோது, விஜய பிரபாகரன் எனக்கு அரசியலில் மூத்தவர், அவர் வெகு சிறப்பாக இப்பொழுது செயல்பட்டு வருகிறார், அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தளபதி விஜய் கூறியதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.