"என்ன விட்டுடு நான் போறேன்" வாழை பார்த்து கண்கலங்கிய பாலா சொன்னதென்ன? மனம் திறந்த மாரி!

First Published | Aug 24, 2024, 4:25 PM IST

Mariselvaraj : இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

Vaazhai movie Mari Selvaraj

திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கு விஷயமாக பயன்படுத்தாமல், அதனுடைய கலை வடிவத்திற்கு உயிர் கொடுக்கும் வெகு சில இயக்குனர்களில் ஒருவர் நான் மாரிசெல்வராஜ். இதுவரை நான்கு திரைப்படங்களை மட்டுமே அவர் இயக்கியிருக்கிறார் என்றாலும் கூட, தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து இப்பொழுது பயணித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் "வாழை". மாரி செல்வராஜின் இளமை பருவத்தில் நடந்த பல நிகழ்வுகளின் கோர்வையே இந்த திரைப்படத்தில் உரையாடப்பட்டுள்ளது.

ஏரி ஆக்ரமிப்பு; நடிகர் நாகார்ஜுனாவின் கட்டிடம் இடித்து தரைமட்டம்!

Vaazhai Movie

பிரபல நடிகர் கலையரசன், நடிகை நிமிலா விமல் மற்றும் நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே பல பிரபலங்களுக்கு இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்த இயக்குனர் மிஷ்கின், நான் மிகவும் விரும்பும் இயக்குனர் அக்கிரா குரோசோவா பேசும்பொழுது இந்திய திரைப்படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள "பதேர் பாஞ்சாலி" திரைப்படத்தை பாருங்கள் என்று சொல்வார். ஆனால் என்னை பொருத்தவரை தமிழகத்தை பற்றி தெரிந்துகொள்ள "வாழை" திரைப்படத்தை பாருங்கள் என்று தான் கூறுவேன் என்று சொல்லி இருந்தார்.

Latest Videos


Director Mysskin

அதேபோல தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதை அமைத்து அதில் பயணித்து வரும் இயக்குனர் பாலா இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த பொழுது, எந்தவிதமான விஷயமும் பேசாமல், மாரி செல்வராஜை இருக அனைத்து கொண்டு முத்தமிட்டார். அதன்பிறகு இருவரும் சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். மாரிசெல்வராஜின் கைகளை இருகப்பற்றிக்கொண்ட பாலா, சில விஷயங்களை அவரிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

Director Mariselvaraj

இந்நிலையில் அப்போது அவர்களுக்குள் பேசிக்கொள்ளப்பட்ட விஷயங்கள் என்ன என்று மாரிசெல்வராஜிடம் கேட்ட பொழுது, "அவர் வெகு நேரம் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார். பெரிதாக எதுவும் பேசவில்லை, "என்னை விட்டுவிடு நான் புறப்படுகிறேன்" என்று கூறினார். அது மட்டுமல்ல "இன்னும் என்னென்ன விஷயங்களை நீ சொல்லப் போகிறாய்"... என்று என்னிடம் கேள்வி கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் கொடுத்த முத்தமே எனக்கு நிறைவை தந்தது என்றார் மாரிசெல்வராஜ்.

தேசிய விருதில் சார்பட்டா பரம்பரை புறக்கணிக்கப்பட இது தான் காரணம் : பா.ரஞ்சித் ஆதங்கம்!

click me!