தேசிய விருதில் சார்பட்டா பரம்பரை புறக்கணிக்கப்பட இது தான் காரணம் : பா.ரஞ்சித் ஆதங்கம்!

First Published | Aug 24, 2024, 3:15 PM IST

தனது படம் சார்பட்டா பரம்பரை தேசிய விருது பட்டியலில் இடம்பெறாததற்கு இயக்குனர் பா. ரஞ்சித் தனது கருத்துக்களே காரணம் என்கிறார். விருது வழங்கும் தன்மையை கேள்வி எழுப்பும் அவர், தன் மீதான வெறுப்பை உணர முடிகிறது என்கிறார்.

Pa Ranjith

சென்னையின் ஆவடியில் பிறந்தவர் தான் பா.ரஞ்சித். கல்லூரி படிக்கும் போதே சினிமாவின் மீது இருந்த ஆசையால், இயக்குனர் லிங்குசாமி, வெங்கட் பிரபு ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
 

Pa Ranjith

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பா.ரஞ்சித் மெட்ராஸ் படத்தை இயக்கினார். முதல் இரு படங்களும் ஹிட்டான நிலையில் பா. ரஞ்சித்திற்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் இயக்கிய கபாலி படம் மிகப்பெரிய ஹிட்டானது. மீண்டும் காலா என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருந்தார்.


Pa ranjith

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், வசூலிலும் சுமாரான வெற்றியே பெற்றது. இதை தொடர்ந்து ஆர்யாவை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

Sarpatta Parambarai

பின்னர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்று பேசி உள்ளார். அப்போது “ சார்பட்டா பரம்பரை படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று பலரும் விமர்சனம் செய்தனர். 

Sarpatta Parambarai

விருது விழாக்களில் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது. கிரிட்க்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை பல விருதுகளை வென்றுள்ளது. அப்படி வாங்கினால் நிச்சயம் தேசிய விருதும் கிடைக்கும். ஆனால் சார்பட்டா பரம்பரை தேசிய விருது பட்டியலில் உள்ளேயே போக முடியவில்லை. இந்த விருதுகளுக்கு சார்பட்டா பரம்பரை தகுதியில்லாததா?

Pa Ranjith

வேண்டுமென்றே என் வேலையை மதிக்க கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றன. எனது கருத்தின் அடிப்படையில் இதை நிராகரிக்கிறார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று தெரிவித்தார்.

Latest Videos

click me!