ரூ.15000 கேட்ட ரஜினிக்கு ரூ.1,10,000 சம்பளம் வழங்கிய தயாரிப்பாளர்.. எந்த படத்திற்கு தெரியுமா?

First Published | Aug 24, 2024, 2:03 PM IST

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். ஆனால் அவர் தனது முதல் படத்தில் ரூ.3000 மட்டுமே சம்பளமாக பெற்றார். பின்னர் படிப்படியாக அவரது சம்பளம் உயர்ந்து பிரியா படத்தில் முதன்முதலாக ரூ.1 லட்சம் சம்பளமாக பெற்றார்.

Rajinikanth

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தனது ஸ்டைல் மற்றும் துள்ளலான நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினி. 45 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் வலம் வருகிறார். ஆம். ரஜினி படம் என்றாலே கட்டாயம் வசூல் வேட்டை நடத்தும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக உள்ளது..

Rajinikanth

அந்த வகையில் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் கடந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் மாறியது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரஜினி தான் இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார். தனது அடுத்த படமான கூலி படத்திற்கு ரூ.280 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Tap to resize

Rajinikanths

இன்று நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் ரஜினி, தனது கெரியரின் ஆரம்ப காலத்தில் சில ஆயிரங்களில் மட்டுமே சம்பளம் வாங்கினார். குறிப்பாக 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு வெறும் 3000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

Rajinikanth

1975-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தில் தான் ரஜினி முதலில் லீட் ரோலில் நடித்திருந்தார். ரஜினியின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான இந்த படத்திற்கு ரூ.50,000 மட்டுமே ரஜினி சம்பளம் வாங்கினாராம். 
இதை தொடர்ந்து ரஜினியின் சம்பளம் பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சூழலில் தான் ரஜினிக்கு பிரியா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எஸ்.பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்தார்.

Rajinikanth

அப்போது பிரியா படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலம் ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அப்போது ரஜினி நான் ஒரு படத்திற்கு ரூ.35000 சம்பளம் வாங்குகிறேன்.. ஆனால் இந்த படம் வெளிநாட்டில் ஷூட்டிங் நடக்கும் என்கிறீர்கள். எனவே ரூ.15000 போதும் என்று கூறியுள்ளார்.

Rajinikanth

அப்போது பஞ்சு அருணாச்சலம் “ உன் மார்க்கெட் நிலவரம் உனக்கு தெரியாதா? வெளியே உன் படத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி லாபம் பார்க்கின்றனர். உனக்கு யாரும் சொல்லவில்லையா? உனக்கு ரூ.1 லட்சம் சம்பளம். இல்லை 1 லட்சம் ராசியாக இருக்காது. ரூ.1,10,000 சம்பளம் என்று கூறியுள்ளார். அதன்படி பிரியா படத்திற்கு தான் ரஜினி முதன்முதலில் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். இப்படி தான் அவரின் சம்பளம் படிப்படியாக உயர்ந்து. இன்று அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார். 

Latest Videos

click me!