அய்யயோ அவரா? ரஜினியோடு கைகோர்க்க கன்னட உலகில் இருந்து ஆளை இறக்கும் லோக்கி - யார் அது?

Ansgar R |  
Published : Aug 24, 2024, 06:01 PM IST

Rajinikanth : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

PREV
14
அய்யயோ அவரா? ரஜினியோடு கைகோர்க்க கன்னட உலகில் இருந்து ஆளை இறக்கும் லோக்கி - யார் அது?
Jailer Movie

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. அதை தொடர்ந்து "ஜெய் பீம்" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்தார். அப்பட பணிகள் முடிந்துள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சூர்யாவின் "கங்குவா" திரைப்படத்துடன் நேருக்கு நேர் மோத உள்ளது வேட்டையன் திரைப்படம்.

சுதந்திர தினம்; தமிழ் நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட மரியாதை! போட்டோஸ்!

24
Coolie Movie

"வேட்டையன்" திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாக வெளியாக உள்ள நிலையில், அவருடைய 171வது திரைப்படமாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் மூத்த தமிழ் திரை உலக நடிகர் சத்தியராஜ், நடிகர் மாஸ்டர் மகேந்திரன், நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

34
Sivakarthikeyan

"வேட்டையன்" திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது லோகேஷ் கனகராஜின் இந்த கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த திரைப்படத்தில் இணைய சில வாய்ப்புகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த சூழலில் கன்னட உலகின் முன்னணி நடிகர் ஒருவர் இப்போது கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
Upendra Rao

கன்னட உலகில் புகழ்பெற்ற நடிகர் தான் உபேந்திரா, இவர் அரசியல் தலைவராகவும் பயணித்து வருகின்றார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் பயணித்து வரும் நடிகர் உபேந்திரா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூலி திரைப்படத்தில் இணையுள்ளதாகவும், அப்படத்தில் வரும் பிரம்மாண்டமான பாடல் கட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடனமாட உள்ளதாகவும் இப்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அன்று ஒரு டெயிலர்; இன்று ஒரு படத்திற்கு 70 கோடி சம்பளம்; ரஜினி, ஐஸ்வர்யா ராயை விட பணக்காரர்!

Read more Photos on
click me!

Recommended Stories