தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் இந்த ஆண்டு முதல் நாள் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களின் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதில் நேற்று ரிலீஸ் ஆன மதராஸி திரைப்படம் முதல் நாளில் தனுஷின் குபேரா படத்தைவிட அதிகம் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. அந்த பட்டியலை சினிடிராக் தளம் வெளியிட்டுள்ளது. அதில் என்னென்ன படங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
211
1. குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இப்படம் முதல் நாளில் ரூ.21.86 கோடி வசூலித்தது. இந்த சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை.
311
2. கூலி
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த கூலி திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆகஸ்டில் ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் முதல் நாளில் ரூ.21.63 கோடி வசூலித்திருந்தது. இதன்மூலம் ஜஸ்ட் மிஸ்ஸில் முதலிடத்தை நழுவவிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தையும் அஜித் படம் தான் பிடித்துள்ளது. ஏகே நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி, மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.19.3 கோடி வசூலித்து இருந்தது.
511
4. ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.11.61 கோடி வசூலை அள்ளி இருந்தது.
611
5. தக் லைஃப்
மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் முதல் நாள் ரூ.10.62 கோடி வசூலித்திருந்தது.
711
6. மதராஸி
இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் மதராஸி. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் முதல் நாளே ரூ.9.92 கோடி வசூலித்து இந்த லிஸ்ட்டில் 6ம் இடத்தில் உள்ளது.
811
7. டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் டிராகன். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.52 கோடி வசூலித்திருந்தது. இப்படம் 7வது இடத்தில் உள்ளது.
911
8. குபேரா
இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ள படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டதால் ஹிட் ஆனது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழகத்தில் ரூ.3.46 கோடி வசூலித்தது.
1011
9. டிடி நெக்ஸ்ட் லெவல்
ஆர்யா தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் தான் இந்த பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடந்த மே மாதம் திரைக்கு வந்த இப்படம் முதல் நாள் ரூ.2.54 கோடி வசூலித்து இருந்தது.
1111
10. மதகஜராஜா
இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ள படம் மதகஜராஜா. விஷால் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாளில் ரூ.2.50 கோடி வசூலை வாரிக்குவித்தது.