இனிய குரலின் அரசன் எஸ்பி பாலசுப்ரமணியம், சம்பமூர்த்தி - சகுந்தலா தம்பதிக்கு மகனாக ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோனம்பட்டியில் பிறந்துள்ளார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். அவருடைய தங்கைகளில் ஒருவரான ஷைலஜா கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பாடல்களுக்கும் மேலே பாடி இருக்கிறார்.
* எஸ்பிபிக்கு படிக்கும் போதே பாடகராக வேண்டும் என்று ஆசையாம். ஆனால் இவரது பெற்றோர் தன்னுடைய மகன் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என நினைத்தாராம். ஆனால் கடைசியில் இசை தான் வென்றது.
* எஸ்பிபி ஆரம்ப காலத்தில் மெல்லிசை குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தக் குழுவில் இசைஞானி இளையராஜாவும் ஒருவராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி கங்கை அமரனும் இந்த குழுவில் பணியாற்றி இருக்கிறார்.
24
எஸ்பிபி பற்றிய அரிய தகவல்கள்
* 1979-ல் வெளியான சங்கராபரனம் படம் திரையுலகில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக இருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் கர்நாடக சங்கீதத்தை வைத்து உருவாக்கி இருப்பார்கள். எஸ்பிபி கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை மையமா வச்சு, சங்கராபரனம் பாடல்களை பாடி இருந்தார். இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
* சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இண்ட்ரோ பாடல் எப்போதுமே எஸ்பிபி தான் பாடுவார். அவர் ஓப்பனிங் பாடல் பாடினால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்கிற பேச்சும் திரையுலகத்தில் இருந்தது. அதேமாதிரி அவர் பாடிய பெரும்பாலான படங்கள் வெற்றிபெற்றன.
* திரைப்பட பாடகி ஜானகி மூலமாக தான் எஸ்பிபிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. இந்த தகவலை எஸ்பிபி-யே நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார்.
34
இளையராஜா - எஸ்பிபி கூட்டணி
* 1983-ம் ஆண்டு வெளிவந்த சாகர சங்கமம் என்கிற தெலுங்கு திரைப்படம் கிளாசிக்கல் இசையில் அமைந்திருந்தது. இந்த படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கும், எஸ்பிபிக்கும் தேசிய விருது கிடைத்தது.
* அதுமட்டுமின்றி 1988-ல் வெளியான ருத்ரவீணா படத்துக்கும் இளையராஜாவும், எஸ்பிபியும் சேர்ந்து இசையமைத்திருந்தார்கள். இந்த படத்துக்காகவும் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது.
* தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா, மராத்தி என பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றார் எஸ்பிபி.
* 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதையும் வென்று சாதனை படத்துள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம்.
* பாரதிராஜா இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான முதல் மரியாதை படத்தில் நாயகனாக நடிக்க முதன்முதலில் எஸ்பிபியை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் தனக்கு அந்த கேரக்டர் செட் ஆகாது என கூறி மறுத்துவிட்டாராம். அதன் பிறகே சிவாஜி கணேசன் நடித்து அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.