கடந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த டாப் 7 தமிழ்த் திரைப்படங்கள்

Published : Jun 03, 2025, 06:16 PM IST

2024-ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த தமிழ்ப் படங்கள் பற்றிய விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
17
1. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time - GOAT)

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ‘GOAT’. இந்த படம் உலகளவில் சுமார் ரூ.440 - ரூ.460 கோடி வசூலைக் குவித்தது. 2024-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக இது உள்ளது.

27
2. அமரன்

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படம் உலகளவில் சுமார் ரூ.300 - ரூ.335 கோடி வசூலை குவித்திருந்தது. இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம்.

37
3. வேட்டையன்

இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வேட்டையன். இந்த படம் உலகளவில் சுமார் ரூ.240 - ரூ.255 கோடி வசூலித்திருந்தது.

47
4. மகாராஜா

நடிகர்கள் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படம் உலகளவில் சுமார் ரூ.170 - ரூ.200 கோடி வசூலித்திருந்தது.

57
5. ராயன்

நடிகர்கள் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கியிருந்தார். உலகளவில் சுமார் ரூ.150 - ரூ.160 கோடி வசூலை குவித்திருந்தது. தனுஷ் இயக்கி, நடித்த 50-வது திரைப்படம் ஆகும்.

67
6. இந்தியன் 2

கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படம் உலகளவில் சுமார் ரூ.151 கோடி வசூலைக் குவித்திருந்தது. மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

77
7. அரண்மனை 4

நடிகர்கள் சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி ஏ கே திரைப்படம் அரண்மனை 4. இது உலகளவில் சுமார் ரூ.100 - ரூ.101 கோடி வரை வசூலித்திருந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories