துணிவு vs வாரிசு... பொங்கலுக்கு விஜய் - அஜித் படங்கள் மோதுவது உறுதி..! ரிலீஸ் தேதியுடன் வந்த தரமான அப்டேட் இதோ

First Published | Oct 14, 2022, 9:34 AM IST

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள தகவல் உறுதிதான் என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய்யும், அஜித்தும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் எலியும், பூனையுமாக சண்டையிட்டு தான் வருகின்றனர். இது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் ரசிகர்கள் இடையே சண்டை ஏற்படும் என்பதனால் தான் பெரும்பாலும், இவர்களது படங்கள் சமீபகாலமாக ஒரே நாளில் ரிலீஸ் ஆவதில்லை.

கடைசியாக இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீசானது என்றால் அது 2014-ம் ஆண்டு தான். அப்போது விஜய்யின் ஜில்லா படமும், அஜித்தின் வீரம் படமும் நேருக்கு நேர் மோதின. இதில் இரண்டு படங்களுமே அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளின. அதன்பின்னர் ஒருமுறை கூட அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகவில்லை.

இதையும் படியுங்கள்... Ajith Kumar Bike Trip: தாய்லாந்தில் பைக்கில் சீறி பாய்ந்த அஜித்..! வேற லெவலுக்கு மாஸ் காட்டிய புகைப்படம்..!

Tap to resize

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நேரடி மோதலுக்கு தயாராகி வருகிறது அஜித் - விஜய் படங்கள். விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த மோதல் குறித்து ஏற்கனவே தகவல் வெளியானாலும், தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது : “அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள தகவல் உறுதிதான். இதில் துணிவு திரைப்படம் ஜனவரி 12-ந் தேதியும், வாரிசு திரைப்படம் ஜனவரி 13-ந் தேதியும் வெளியாக உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் நிச்சயம் சமமான திரையரங்குகள் கிடைக்கும்” என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

விஜய் - அஜித் படங்கள் இதுவரை ஆறு முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு பிரண்ட்ஸ் மற்றும் தீனா, 2002-ம் ஆண்டு பகவதி மற்றும் வில்லன், 2003-ம் ஆண்டு திருமலை மற்றும் ஆஞ்சநேயா, 2004-ம் ஆண்டு ஆதி மற்றும் பரமசிவன், 2007-ம் ஆண்டு போக்கிரி மற்றும் ஆழ்வார், 2014-ம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி உள்ளன. இந்த லிஸ்ட்டில் விரைவில் வாரிசு மற்றும் துணிவு இடம்பெற உள்ளது.

இதையும் படியுங்கள்...  Mysskin: இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Latest Videos

click me!