Published : Nov 10, 2025, 11:21 AM ISTUpdated : Nov 10, 2025, 11:26 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய், உடல்நலக் குறைவால் இன்று காலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இதையடுத்து சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பின்னர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இதன்பின்னர் போகப் போக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் ஆள் அட்ரஸே தெரியாமல் போனார்.
24
உதவி கோரிய அபிநய்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் மெலிந்த நிலையில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்த அபிநய், தான் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சைக்கு ரூ.28 லட்சம் தேவைப்படுவதாகவும் உதவி கோரி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதையடுத்து சிலர் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக கேபிஒய் பாலா, அபிநய்யை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, அவருக்கு தன்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் ரூபாய்யை மருத்துவ செலவுக்காக கொடுத்திருந்தார். அப்போது பாலாவை கட்டியணைத்து கண்ணீர் சிந்தி இருந்தார் அபிநய்.
34
அபிநய் உடன் நடிக்க ஆசைப்பட்ட பாலா
இதன்பின்னர் அபிநய் உடல்நிலை குறித்து அறிந்த தனுஷ், அவரின் மருத்துவ செலவுக்காக உதவி செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் பாலாவின் காந்திக் கண்ணாடி திரைப்படம் ரிலீஸ் ஆன போது அதன் ஆடியோ லாஞ்சுக்கு அபிநய்யை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த பாலா, அவரை மேடையேறி பேசவும் வைத்தார். நீங்க உடல்நிலை சரியாகி வந்ததும் உங்களுடன் நான் நடிக்க வேண்டும் என்றும் பாலா கூறி இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 4 மணியளவில் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆள் இல்லையாம். அபிநய்யின் மரணம் குறித்து அறிந்ததும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.