சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஒரு பாடகியாக மிகவும் பிரபலமானவர் சிவாங்கி. இவருடைய அம்மா ஒரு பாடகி என்பதால், சிவாங்கியும், சிறுவயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் பயின்று வந்த நிலையில், பின்னணி பாடகியாக மாற முயற்சி செய்தார். இதன் துவக்கமாகவே அவர் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.