நடிகை சாய் பல்லவி ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், வித்தியாசமான கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக ‘விரட பர்வம்’ என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம், நக்ஸ்லைட்டான ராணாவை காதலிக்கும் மிகவும் துணிச்சலான பெண் கதாபாத்திரம்.
பெண்கள் முதல் குழந்தைகள் வரை... ஒவ்வொரு நாளும் சில காம கொடூரர்களால் சந்திக்க நேரும் சமூக பிரச்சனை குறித்து பேசியுள்ளது இப்படம்.
மேலும் குற்றமே செய்யாமல், ஒரு வழக்கில் சிக்கினால் கூட அவர்களது குடும்பம் எப்படி பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறது. மீடியாக்கள் எப்படி அவர்களை சித்தரிக்கிறது என மிகவும் எதார்த்தமாக இந்த படத்தை இயக்கி சொல்ல வந்த கருத்தை எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.
Sai Pallavi
'கார்கி' படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், ஸ்ரீயாந்தி மற்றும் பிரேம்கிருஷ்ணா அக்காது ஒளிப்பதிவு செய்துள்ளனர், ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.