நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "நானும் ரவுடி தான்" படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. ஏற்கனவே சில காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா ஆரம்பத்தில் இந்த காதல் செய்தியை மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
எனவே ரசிகர்கள் பலரும் எப்போது இவர்களுடைய திருமணம் நடக்கும் என கடந்த மூன்று ஆண்டுகளாகவே எதிர்பார்த்த நிலையில், ஒருவழியாக இருவரும் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துவிட்டனர். விக்கி - நயன் திருமணம் கடந்த மாதம் (ஜூன் மாதம்) 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் நடந்து முடிந்தது.
Nayanthara
குறிப்பாக ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஷாருக்கான், சூர்யா, அட்லீ, அனிரூத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் இந்த ஜோடி வெளியிட்டிருந்தது.
nayanthara vignesh shivan wedding
இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நெட்ப்ளக்ஸ் நிறுவனத்திடம் ரூபாய் 25 கோடிக்கு கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், திருமணத்திற்கு வரும் யாரும் தங்களுடைய போனில் எவ்வித புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என்பதே அந்த விதிமுறை.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன், திருமணம் ஆன முதல் மாதத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படங்களை பகிர்வதில் அதிக தாமதம் சரியாக இருக்காது, அது பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
Nayanthara vignesh shivan wedding photos
இவருடைய இந்த செயலை விரும்பாத நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு விஷயத்தில் இருந்து அதிரடியாக பின் வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவழிக்க வில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளத இவர்களது திருமணம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் அறைகள் முன்பதிவு முதல் சாப்பாடு வரை அனைத்துக்கும் netflix நிறுவனம் தான் கவனித்து கொண்டதாம். விக்னேஷ் சிவனின் செயலில் திடீர் என nexflix நிறுவனம் பின்வாங்கியதால், இருவருமே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.