கடந்த 2019 ரவிகுமார் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் "மன்மதன் அம்பு". கமல், மாதவன், திரிஷா, சங்கீதா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழ்பெற்றது. இருப்பினும் "நீல வானம்" என்கின்ற காதல் பாடல் இன்றளவும் பலருக்கு ஃபேவரட்டான ஒரு பாடல். ஆனால் இந்த பாடல் முழுக்க முழுக்க ரிவர்சல் அமைந்திருக்கும். ஆகவே பாடல் வரிகளையும் ரிவர்ஸில் எழுதி, அதை பாடி ஒரு புதுமையை கையாண்டிருப்பார்கள் உலகநாயகன் கமலஹாசனும் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாதும்.