நாயகன் முதல் தெனாலி வரை; காலத்திற்கும் மறக்கமுடியாத டெல்லி கணேஷின் தரமான 4 கதாபாத்திரங்கள்!

First Published | Nov 10, 2024, 4:57 PM IST

Delhi Ganesh : தமிழ் திரையுலகின் ஒப்பற்ற கலைஞராக பயணித்து வந்த பிரபல நடிகர் டெல்லி கணேஷ் தனது 80வது வயதில் காலமானார்.

Nayakan Movie

கமல்ஹாசனின் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் தான் பிரபல நடிகர் டெல்லி கணேஷ். அந்த வகையில் கடந்த 1987ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "நாயகன்" என்கின்ற திரைப்படத்தில் மிக நேர்த்தியான ஒரு கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்திருப்பார். ஐயர் என்ற கதாபாத்திரத்தில் சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்த கமலஹாசனின் உதவியாளராக அப்பிடத்தில் நடித்திருப்பார் அவர். 

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இந்த திரைப்படத்தில் ஒரு மருத்துவமனை காட்சி வரும். கமலஹாசன் இருக்கும் இடத்தை சொல்ல வேண்டும் என்று வில்லன்கள் டெல்லி கணேஷை பயங்கரமாக தாக்கி விட்டு செல்வார்கள். அப்போது கமலஹாசன் மற்றும் டெல்லி கணேஷ் இடையே நடக்கும் அந்த கான்வர்சேஷன் இன்றும் பலரது ஃபேவரட் காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

‘காந்தாரா’ முதல் ‘புஷ்பா 2’ வரை பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் பான்-இந்தியா படங்கள் லிஸ்ட்

Actor Delhi Ganesh

கடந்த 1990 ஆம் ஆண்டு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான கமலஹாசனின் திரைப்படம் தான் மைக்கேல் மதன காமராஜன். இளையராஜா இசை இந்த திரைப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம் என்றால் இந்த திரைப்படத்தில் ஒரே சமயத்தில் நான்கு கமலஹாசனை திரையில் காட்டி அசத்தியிருப்பார் இயக்குனர். இந்த திரைப்படத்தில் காமேஸ்வரன் என்கின்ற கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்திருப்பார். அவருடைய தந்தையாக பாலக்காட்டு மணி ஐயர் என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் டெல்லி கணேஷ்.

Latest Videos


Avvai Shanmugi

கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன கமலஹாசனின் திரைப்படம் தான் அவ்வை சண்முகி. இந்த திரைப்படத்தில் மறைந்த மூத்த தமிழ் திரை உலக நடிகர்கள் ஜெமினி கணேசன் மற்றும் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதேபோல இந்த திரைப்படத்தில் சேதுராமன் ஐயர் என்கின்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காமெடியனாக நடித்து அசத்தியிருப்பார் டெல்லி கணேஷ். உண்மையில் கமலஹாசன் வியந்து பாராட்டும் அளவிற்கு நடிக்கக் கூடிய வெகு சில நடிகர்களில் கணேசன் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

Delhi Ganesh

கமலஹாசன் நடிப்பில் கடந்த 2000வது ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெனாலி. இந்த திரைப்படத்தையும் இயக்கியது கே.எஸ் ரவிக்குமார் தான். ஏ ஆர் ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு 80 கோடி ரூபாயை தாண்டி இந்த திரைப்படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பஞ்சபூதம் என்கின்ற கதாபாத்திரத்தில் மனோதத்துவ டாக்டராக டெல்லி கணேசன் நடித்திருப்பார். இந்த படம் முழுக்க கமலஹாசனை வைத்து நடிகர் ஜெயராமை இம்சிக்கும் அவருடைய வில்லத்தனமான காமெடி பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.

நிதி நெருக்கடியில் விஜய்யின் தளபதி 69 படம் – கடன் வாங்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம்?

click me!