Thalapathy 69 is in Financial Crisis : கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி, சமந்தா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பூஜா ஹெக்டேவிற்கு ரூ.6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படமானது தெலுங்கு சினிமாவி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் திரைக்கு வந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.