தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த அமரன் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. கமல்ஹாசன் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் முதன்முறையாக 200 கோடி வசூல் அள்ளிய படம் என்றால் அது அமரன் தான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் செம்ம பிசியாக நடித்து வருகிறார்.
24
A R Murugadoss Sivakarthikeyan film SK 23
அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.23 திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் என்கிற கன்னட நடிகை நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்.கே.24 திரைப்படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.
இதுதவிர சிவகார்த்திகேயன் கைவசம் மற்றுமொரு படமும் உள்ளது. அப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். அப்படத்திற்கு புறநானூறு என பெயரிடப்பட்டு உள்ளது. இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இப்படத்தில் முதன்முதலில் சூர்யா தான் நாயகனாக நடிக்க இருந்தார். அவருடன் நஸ்ரியா, அதிதி ஷங்கர், துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் சர்ச்சைக்குரிய கதை என்பதால் அதில் இருந்து சூர்யா திடீரென விலகிவிட்டார்.
44
Nivin Pauly likely to act villain in sivakarthikeyan's SK25 movie
அதன்பின்னர் அந்த கதையை சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க உள்ளார் சுதா கொங்கரா. அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேமம் படத்தில் நடிகை சாய் பல்லவியின் காதலனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிவின் பாலி தற்போது சிவகார்த்திகேயனை அடிச்சு துவம்சம் செய்ய வில்லனாக களமிறங்கி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.