அடுத்த 6 மாசத்துல தனுஷுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவோம் - நெப்போலியன் ஓபன் டாக்

First Published | Nov 10, 2024, 10:59 AM IST

நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், தனுஷுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவேன் என அவர் கூறி இருக்கிறார்.

Napoleon Son Dhanoosh Marriage

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு தான் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் அல்ல ஜப்பானில் தன் மகன் தனுஷின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். அதுவும் தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Napoleon Son Dhanoosh Haldi Function

ஜப்பானில் நடைபெற்ற முதல் தமிழ் பாரம்பரிய திருமணம் நெப்போலியன் மகன் திருமணம் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த திருமணம் பெரும் பேசுபொருள் ஆனதற்கு காரணம், நெப்போலியன் மகன் தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவரால் நடக்க முடியாது. வீல் சேரிலேயே தான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அவருக்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்கிற பெண்ணோடு திருமணம் நடத்துவதை பார்த்த பலரும், பணமிருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீண்டித்துவிட்டார்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... நெப்போலியன் மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட 70 வகையான இந்திய உணவுகள்! 4 மாதமாக நடந்த ஏற்பாடு!

Tap to resize

Napoleon son Dhanoosh Wedding

ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தாத நெப்போலியன் தன் மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். தனுஷின் மனைவி அக்‌ஷயா நர்ஸாக பணியாற்றியவர் என்பதால் அவர் தனுஷை நன்றாக பார்த்துக் கொள்வார் என்பதாலும், அவரும் முழு சம்மதத்துடன் தான் தனுஷை கரம்பிடித்துள்ளதாகவும் கூறி இருக்கிறார். மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்தியதற்கு காரணம் தனுஷுக்கு ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.

Napoleon son Dhanoosh Married Akshaya

அந்த கனவை நிறைவேற்றும் விதமாக அவரின் திருமணத்தையே ஜப்பானில் நடத்தி முடித்திருக்கிறார் நெப்போலியன். தனுஷின் திருமணத்திற்காக அவர் ரூ.150 கோடி வரை செல்வழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் சுஹாசினி மணிரத்னத்துடனான பேட்டியில் பேசிய நெப்போலியனும் அவரது மனைவி சுதாவும், இந்தியாவை விட அமெரிக்கா ரொம்ப காஸ்ட்லி, ஆனால் அமெரிக்காவை விட ஜப்பான் 4 மடங்கு காஸ்ட்லி. திருமண செலவும் நினைத்ததை விட 4 மடங்கு அதிகரித்துவிட்டது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லாம் என் மகன் தனுஷுக்காக தான என சொல்லி உள்ளனர் நெப்போலியன் - சுதா தம்பதி.

Dhanoosh and Akshaya

திருமணம் முடிந்தாலும் இன்னும் இரண்டு மாதங்கள் தனுஷுடன் தாங்கள் ஜப்பானில் தான் இருப்போம் என கூறியுள்ள நெப்போலியன், ஜனவரி மாதம் தான் ஜப்பானில் இருந்து கிளம்பி அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறி உள்ளார். மேலும் இந்த டூரை முடித்து தாங்கள் அமெரிக்கா சென்ற பின்னார் அந்த நாட்டு சட்ட திட்டத்தின் படி தாங்கள் தனுஷ் - அக்‌ஷயாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண உள்ளதாக நெப்போலியன் கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... திருமணம் முடிந்த கையேடு நெப்போலியன் மகன் தனுஷ் மனைவியோடு எங்கு அவுட்டிங் போயிருக்காரு பாருங்க!

Latest Videos

click me!