வேட்டையனுக்கு வேட்டு வைத்த அமரன்! ரஜினி பட லைஃப் டைம் வசூலை 10 நாளில் அள்ளிய SK

First Published | Nov 10, 2024, 10:04 AM IST

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் படம் முறியடித்து உள்ளது.

Vettaiyan vs Amaran

தமிழ் சினிமாவில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்த அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் எஸ்.கே.வுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இப்படம் கடந்த அக்டோபர் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

Amaran Movie

அமரன் திரைப்படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் சூர்யா, சிம்பு ஆகியோர் படத்தை பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தனர். சுமார் 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

இதையும் படியுங்கள்... வெறும் பத்தே நாள்; அடுத்த மெகா ஹிட் டார்கெட்டை அடைந்த அமரன் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tap to resize

Amaran Box Office Collection

அமரன் திரைப்படம் இதுவரை 10 நாட்களில் 214.68 கோடி வசூலித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் அப்படம் ரூ.102.28 கோடி வசூலித்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் ரூ.7.27 கோடியும், ஆந்திராவில் ரூ.22.87 கோடியும், கர்நாடகாவில் ரூ.11.72 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.3.09 கோடியும், வெளிநாடுகளில் ரூ.67.45 கோடியும் வசூலித்து மொத்தமாக 214.68 கோடி வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் அமரன் படைத்துள்ளது.

Amaran Beat Vettaiyan Movie Lifetime Box Office Collection

அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் வேட்டையன் பட லைஃப் டைம் வசூல் சாதனையை அமரன் படம் 10 நாட்களில் முறியடித்து மாஸ் காட்டி உள்ளது. வேட்டையன் திரைப்படத்தால் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை எட்ட முடியவில்லை. ஆனால் அமரன் படம் அந்த இமாலய இலக்கை 10 நாட்களில் எட்டி உள்ளது. இதுவரை அப்படம் தமிழ்நாட்டில் ரூ.102 கோடி வசூலித்து உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் அள்ளிய படங்களில் கோட் படத்துக்கு அடுத்தபடியாக அமரன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  'அமரன்'-னுக்கு இசையால் வலு சேர்த்த ஜிவி! சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்டலி வாட்ச்; எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!