
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள 2-ஆம் பாக திரைப்படம் தான் 'விடுதலை 2'. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற, சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஹீரோவாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியார் என்கிற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று காலை 9:00 மணிக்கு
அரசு அனுமதியோடு ஸ்பெஷல் ஷோ வெளியிடப்பட்ட நிலையில், இந்த படத்தை பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்களை பார்ப்போம்.
வெற்றிமாறனின் தரமான இயக்கம்:
வாழ்வியலோடு கலந்த, கதைகளை உயிரோட்டத்துடன் ரசிகர்களுக்கு விருந்தாகும் வித்தகர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், மற்றும் விடுதலை 2 வரை அவரின் தனித்துவமான இயக்கம் ரசிகர்கள் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும் . அதே போல் ஒரு எதார்த்தமான அணுகுமுறையால் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். 'விடுதலை' படத்தின் முதல் பாகத்திலேயே எப்போது அடுத்த பாகம் வெளியாகும் என ஆர்வத்தை தூண்டிய வெற்றிமாறன், இரண்டாவது பாகத்தை எப்படி இயக்கி உள்ளார் என்பதை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.
கோலிவுட்டின் அடுத்த மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததா விடுதலை 2? விமர்சனம் இதோ
நடிகர்களின் உழைப்பும் - தரமான நடிப்பும்:
எப்படி பாலா இயக்கத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம் என பல நடிகர்கள் வாய்விட்டு சொல்லி விடுகிறார்களோ... அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதும் கடினமான ஒன்றே. ஆனால் அவர் செட்டில் நடிகர்களை திட்டுவார் இவர் துணை இயக்குனர்களை திட்டியே நடிகர்களிடம் வேலையை வாங்கி விடுவார் என கூறுவார்கள். இருவரும் தாங்கள் எதிர்பார்த்த நடிப்பது நடிகர்களிடம் கிடைக்கவில்லை என்றால் 1 வாரம் ஆனாலும் விடாமல் ரீடேக் எடுத்து ஒரு வழி செய்து விடுவார்கள். இவர்களின் இந்த அணுகுமுறை கூட... இவர்களின் படங்களுக்கு தனி அடையாளத்தை கொடுத்திருக்கலாம்.
இப்படி பட்ட இயக்குனர் வெற்றிமாறன் கையில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், தினேஷ் போன்ற ஃபேர் ஃபாம்மெர்ஸ் கிடைத்தால் எப்படி அவர்களை நடிக்க வைத்திருப்பர்? சொல்லவா வேண்டும் வேறு லெவலில் இருக்கும். அதே போல் நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறி இருப்பதால் அதிகம் மெனக்கெட்டு தான் இந்த படத்தில் நடித்துள்ளார். எனவே இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பும், இப்படத்திற்காக அவர்கள் போட்டிருக்கும் உழைப்பையும் கண்டிப்பாக வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.
சமூக பிரச்னையை பேசியுள்ள படம்:
கமெர்ஷியம் திரைப்படங்களை விட, சமூக பிரச்னையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களை பற்றியும் எடுக்கப்படும் படங்கள், கடந்த சில வருடங்களாகவே அதிகம் கவனம் பெற்று வருகின்றன. அதே பாணியில் தான், 'விடுதலை 2' படத்தின் கதையும் நகர்கிறது. போலீஸ் கான்ஸ்டேபிளாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி ஒரு போராளியாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் விஜய் சேதுபதியை ஒரு போராளி என்று மட்டுமே காட்சிப்படுத்திய இயக்குனர், இந்த பாகத்தில் அவர் என்ன நோக்கத்திற்காக தன்னுடைய மக்களுக்காக போராட வருகிறார் என்று ஒரு முக்கிய சமூக பிரச்னையை பேசியுள்ளார். இதுவும் இந்த படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்களில் ஒன்று.
சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?
விடுதலை 2 விஷுவல்ஸ்:
ஒரு படத்தின் தரத்தை உறுதி செய்வது அந்த படத்தின் ஒளி மற்றும் ஒலி தான். எவ்வளவு அற்புதமான கதையாக இருந்தாலும், இந்த இரண்டும் சரி இல்லை என்றால், கோடிக்கணக்கில் பணம் செலவழித்து எடுத்தாலும் அந்த படம் வெகு சுலபமாக தோல்வியை சந்திக்க நேரிடும். வெற்றிமாறனை பொறுத்தவரை, அவரின் கதைகள் பேசுவதை தாண்டி அவர் படத்தில் இடம்பெறும் காட்சிகளும் பேசும். இதனை 'விடுதலை 2' ட்ரைலரிலேயே நிரூபித்திருந்தார் வேல்ராஜ்.
ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் 'விடுதலை 2' படத்திற்கு தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் உயிர்கொடுத்துள்ளது போல், ஜிவி பிரகாஷின் இசை, இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
முடிவின் மீதான ஆர்வம்?
முதல் பாகத்தில் எந்த இடத்தில் இந்த படத்தை முடித்தாரோ இயக்குனர் 'வெற்றிமாறன்' அதே இடத்தில் இருந்து தான் இரண்டாம் பாகத்தை துவங்கியுள்ளார். 'விடுதலை' முதல் பாதியின் கிளைமேக்சில் ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்த கிளிஃப்ஹேங்கர் காட்சிக்கு பின்னர் என்ன நடந்தது? இந்த படத்தின் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக திரையரங்கில் மிஸ் பண்ணாமல் ரசிகர்கள் பார்க்க வேண்டும்.
சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?