டிரெண்டிங் நடிகையை செலக்ட் பண்ண ராகவா லாரன்ஸ் – வேதிகா, ஓவியா, ராய் லட்சுமிக்கு டிமிக்கி!

First Published | Dec 20, 2024, 11:22 AM IST

Pooja Hegde in Kanchana 4 Movie : காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Kanchana 4, Raghava Lawrence, Pooja Hegde

Pooja Hegde in Kanchana 4 Movie : சினிமாவில் பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். நடிகர், நடன இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். 1993 ஆம் ஆண்டு நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு நடிகராக எண்ட்ரி கொடுத்தார்.

இவருடைய உண்மையான பெயர் ராகவா முருகையா. சினிமாவிற்காக தன்னுடைய பெயரை ராகவா லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் தன்னை ஒரு முக்கிய நடிகர்களில் ஒருவராக மாற்றிக் கொண்டார்.

Raghava Lawrence, Kanchana 4 Shoot, Pooja Hegde in Kanchana 4 Movie

இவரது நடிப்பில் வந்த முனி, முனி 2: காஞ்சனா, முன் 3: காஞ்சனா 2, முனி 4: காஞ்சனா 3 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன இந்த படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்துள்ளார். இந்த வரிசையில் இப்போது காஞ்சனா 4 படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக வந்த பேய் படங்களில் ராய் லட்சுமி, வேதிகா, ஓவியா தான் ராகவா லாரன்ஸின் சாய்ஸாக இருந்துள்ளது. இப்போது முதல் முறையாக தமிழ் சினிமாவில் டாப் டிரெண்டிங்கில் இருக்கும் பூஜா ஹெக்டேவை இப்போது அவருடைய சாய்ஸாக இருக்கிறது. பூஜா ஹெக்டே தற்போது தளபதி69 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Tap to resize

Raghava Lawrence, Kanchana 4 Shooting From May 2025

இந்த நிலையில் தான் பூஜா ஹெக்டே காஞ்சனா 4 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன் பிறகு 5 ஆண்டுகளாக ராகவா லாரன்ஸ் பேய் படங்களை கையில் எடுக்காத நிலையில் இப்போது மீண்டும் எடுத்துள்ளார்.

Pooja Hegde in Kanchana 4 Movie

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வந்த சந்திரமுகி 2 பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே போன்று தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது அதிகாரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு பெயர்போன இயக்குநர்கள் யார் என்றால் அது சுந்தர் சியும், ராகவா ராலன்ஸும். சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 2 படம் உலகம் முழுவதும் வெளியாகி 114 கோடி வசூல் குவித்தது. இதே போன்று தான் காஞ்சனா 3 படம் ரூ.130 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் தான் இனி காஞ்சனா 4 படம் உருவாக இருக்கிறது. இந்தப் படம் எப்படியும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்

Latest Videos

click me!