இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்! பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூட் விடப்போகும் அந்த 2 பேர் யார்?

First Published | Dec 20, 2024, 11:28 AM IST

Bigg Boss Tamil Elimination : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், ரஞ்சித், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களின் இருந்து ஒருவர் தான் பிக் பாஸ் பைனல் மேடையில் டைட்டிலை தட்டிதூக்க உள்ளனர். இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சி உள்ளது.

Anshida, vishal

பிக் பாஸ் நிகழ்ச்சி பைனலை நெருங்க நெருங்க ஆட்டமும் சூடுபிடிக்கும். அந்த வகையில் இந்த சீசனில் இந்த வாரம் முழுக்க செங்கலை சேகரித்து கோட்டை கட்டும் டாஸ்க் நடைபெற்றது. இதில் ரெட், பிங்க், மஞ்சள், ப்ளூ ஆகிய நான்கு அணிகள் பிரிக்கப்பட்டது. இதில் ரெட் அணியில் இருந்த அருண் பிரசாத், விஜே விஷால், செளந்தர்யா ஆகியோர் முதல் சுற்று முடிவிலேயே வெளியேறினர். இதையடுத்து இதர மூன்று அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8-ல் பணக்கார போட்டியாளர் இவர்தான்; சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Tap to resize

Jacquline, Rayaan

இறுதியாக ஜாக்குலின், ரஞ்சித், ரயான் ஆகியோர் அடங்கிய மஞ்சள் நிற அணி வெற்றிவாகை சூடியது. இவர்கள் அணியை சேர்ந்த ரயான் நாமினேஷன் பாஸ் வென்றார். இதன்மூலம் அடுத்த வார எவிக்‌ஷனில் இருந்து தப்பி இருக்கிறார் ரயான். இந்த டாஸ்க்கின் இறுதியில் முத்துக்குமரன், ஜாக்குலின், ஜெஃப்ரி ஆகியோர் சிறப்பாக பங்கெடுத்துக் கொண்ட போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் சரியாக பங்கெடுத்துக் கொள்ளாத போட்டியாளராக செளந்தர்யா மற்றும் அன்ஷிதா தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Ranjith

இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் எவிக்‌ஷன் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்‌ஷன் நடந்ததை போல் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி, ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்களில் ரஞ்சித் தான் கம்மியான வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளார். இதனால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆவது உறுதி, மற்றொரு நபராக ரயான் எலிமினேட் ஆகவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை ரயான் எலிமினேட் ஆனால் அவரிடம் உள்ள நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜாக்குலினுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பணப்பெட்டி வந்ததும் எடுத்துட்டு சிட்டா பறக்கப்போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

Latest Videos

click me!