இதில் கூறப்பட்டுள்ளதாவது... எங்கள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கீழே கண்ட கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திரையரங்குகளில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு, மற்றும் பராமரிப்பு செலவு உயர்வு, காரணமாக திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளதால், தற்போதுள்ள பராமரிப்பு கட்டணத்தை ஏசி தியேட்டருக்கு ரூபாய் 4 இருந்து ரூபாய் 10 ஆகவும், Non ஏசி தியேட்டருக்கு ரூபாய் 2 இருந்து ரூ.5 உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.