Janhvi Kapoor : கண்ணா பின்னாவென கட் செய்த உடையில் ஜான்வி கபூர்...நியூ லுக் போட்டோஸ் இதோ

Published : Oct 20, 2022, 04:36 PM ISTUpdated : Oct 20, 2022, 04:38 PM IST

பிகினி மற்றும் கண்ணா பின்னாவென  கட் செய்த உடை அணிந்து ஹெட்ரிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

PREV
17
 Janhvi Kapoor : கண்ணா பின்னாவென  கட் செய்த உடையில் ஜான்வி கபூர்...நியூ லுக் போட்டோஸ் இதோ
Janhvi Kapoor

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர்கள் இருவருமே பாலிவுட் படங்களில் என்ட்ரி கொடுத்துவிட்டனர்.

27
Janhvi Kapoor

இதில் ஜான்வி கபூர் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திரில்லரான தடக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்விக் கபூர். இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் என இரண்டிலுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...டூ பீஸில் மனதை கவரும் வெந்து தணிந்தது காடு பட நாயகி சித்தி இத்தானி

37
Janhvi Kapoor

இதை தொடர்ந்து தி கார்கில் கேர்ள் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார். இதன் மூலம் இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பரிசுகளும் கிடைத்தன. ஆனால் ஜான்விகபூரின் முதல் படம் வெளியான சமயத்தில் அவரது தாயார்  ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டார்.

47

இதனால் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகி இருந்த ஜான்வி கபூர் பின்னர் தனது சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டு சினிமாவுலகில் முழு கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பலமொழிகளில் பணியாற்றி வந்த ஸ்ரீதேவியின் இடத்தை தான் பெறுவதற்காக பல முயற்சிகளில் இறங்கியுள்ளார் ஜான்வி கபூர்.

57
Image: Janhvi Kapoor/Instagram

சமீபத்தில் இவர் நடிப்பில் குட்லக் ஜெர்ரி என்னும் படம் வெளியாகி இருந்தது. இது நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலாவின் இந்தி ரீமேக்காகும். இதில் ஜான்வியின் நடிப்பு  பாராட்டுக்குரியதாக இருந்தது.

67

தற்போது மிலி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி, பவால் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் ஜான்விகபூர். இதற்கிடையே சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஸ்கை டைவிங்கில் கலக்கும் நஸீம் நஸ்ரியா...துபாயில் கலக்கும் ராஜா ராணி நாயகி

77

புடவை போன்ற உடைகளில் அதிக புகைப்படங்களை எடுத்து வந்த ஜான்வி கபூர் சமீப காலமாக அதிக கவர்ச்சிகளை கொட்டி வருகிறார். அதன்படி பிகினி மற்றும் கண்ணா பின்னாவென  கட் செய்த உடை அணிந்து ஹெட்ரிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

click me!

Recommended Stories