லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை சுற்றி பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல், தன்னுடைய மகன்களை கவனித்து கொள்வது, கையில் உள்ள படங்களை நடித்து கொடுப்பது என பிசியாக இருக்கிறார். ஷாரூக்கானுடன் நடித்து வரும் 'ஜவான்' படப்பிடிப்புக்கு பின்னர், நயன்தாரா சில வருடங்கள் முழுமையாக திரையுலகை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.