Vijay Devarakonda
தெலுங்கு உலகில் சூப்பர் நாயகனாக விஜய் தேவர கொண்டா கடந்த 2015-ம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து வரவேற்பும் கிடைத்த படங்களில் நடித்த இவருக்கு அர்ஜுன் ரெட்டி ,கீதா கோவிந்தம் படங்கள் மாற்று மொழி ரசிகர்களை கொணர்ந்தது. பின்னர் , அர்ஜுன் ரெட்டி இவருக்கு பிலிம்பேர் விருதையும், கீதா கோவிந்தத்திற்காக SIIMA சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.
Vijay Devarakonda
தற்போது விஜய் தேவார கொண்டா நடிப்பில் குஷி படம் உருவாக்கி வருகிறது. இதில் சமந்தா நாயகியாக நடித்துள்ளார். ரோஜா படத்தின் ரீமேக் போல இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் - சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது.
மேலும் செய்திகளுக்கு..மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..
liger
அதோடு இவர் நடிப்பில் லிகர் படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். அந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாயகன் விஜய் தேவரகொண்டாவை மும்பையில் இருந்து சந்திக்க வந்த இரு ரசிகைகளில் ஒருவர் இவரை கண்டத்துடன் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். அதோடு தன முதுகில் உள்ள லிகர் டாட்டூவையும் காட்டியுள்ளார். இந்த ரசிகைகள் இருவரும் மருத்துவர்களாவர்.