இது அருவாவும் இல்லை..சூர்யாவுக்கான கதையும் இல்லை..விஷயத்தை உடைத்த இயக்குனர் ஹரி !

First Published | Jul 3, 2022, 2:43 PM IST

அருவா அறிவிப்பின் போதே யானை குறித்த திட்டமும் கைவசம் இருந்தது. இந்த கதைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. சூர்யாவுடனான திட்டம் கைவிடப்படவில்லை. சூர்யா பிஸியாக இருப்பதால் தாமதமாகியுள்ளது எவ்வளவுதான் என ஹரி கூறியுள்ளார்.

yaanai movie

முதல் நாளே நல்ல வசூலை பெற்ற படம் யானை. உலகமுழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் ரிலீஸ் நாளான ஜூலை 1 -ல் 4. 5 கோடியை வசூலித்து நல்ல ஓப்பனிங் பெற்றது. அருண் விஜயின் மாறுபட்ட தோற்றத்தில் உருவான இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது.

yaanai movie

சாமி ஸ்கொயருக்கு பிறகு நான்கு ஆண்டு இடைவெளியில் யானை உருவாகியுள்ளது. இதில் பிரியா பவானி சங்கர்,  சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தனது பாணியை மாற்றாத ஹரி நகைச்சுவைக்கென டர்ன் டிப்பார்ட்மெண்டை இந்த படத்தில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்திய இயக்குனர்கள் கதையுள்ளேயே நகைச்சுவையை வைத்து விடுகின்றனர். ஆனால் இயக்குனர் ஹரி தனது படத்தில் காமெடிக்கென தனி சீன்களை வைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார்.

Tap to resize

yaanai movie

மாமன் , மைத்துனர்களான அருண் விஜயும், ஹரியும் இணையும் முதல் படமான இது முன்னதாக சூர்யா நடிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட படத்தின் கதையே யானை என கூறப்பட்டது. சிங்கம் சீரிஸை வெற்றி கரமாக கொடுத்த ஹரி - சூர்யா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அருவா யானையாக மாறி சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளதாக பேசப்பட்டது.

suriya

வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3,  'அருவா' என இவர்கள் கூட்டணி நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இதையடுத்து ஆறாவது முறையாக இந்த கூட்டணியில் அருவா படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தாகவும்,  ஏப்ரல் 2020க்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

suriya - hari

ஆனால் அறிவித்தபடி அருவா படப்பிடிப்பு துவங்கவில்லை. மாறாக சூர்யா "எதற்கும் துணிந்தவன், பாலாவுடன் ஒரு படம். வாடிவாசல் என பிஸியாகி விட்டார். அதோடு  ராக்கெட்டரி படத்தில் காமியோ, விக்ரமின் காமியோ என தொடர் படங்களில் கமிட்டானார்.

director hari

இந்நிலையில் யானை ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் அருவா குறித்து பேசிய இயக்குனர் . இரண்டு படத்தின் கதையும் வேறுவேறு. அருவா அறிவிப்பின் போதே யானை குறித்த திட்டமும் கைவசம் இருந்தது. இந்த கதைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. சூர்யாவுடனான திட்டம் கைவிடப்படவில்லை. சூர்யா பிஸியாக இருப்பதால் தாமதமாகியுள்ளது எவ்வளவுதான் என ஹரி கூறியுள்ளார்.

Latest Videos

click me!