இந்நிலையில், நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா. இதையடுத்து போலீசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.