அருவா படத்தில் மிஸ் ஆன “சூர்யா - பூஜா ஹெக்டே” ஜோடி மீண்டும் இணைந்தது... இயக்கப்போவது யார் தெரியுமா?

Published : Jul 03, 2022, 03:18 PM IST

suriya : அருவா படத்தில் பூஜா ஹெக்டேவை சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த சமயத்தில் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை.

PREV
14
அருவா படத்தில் மிஸ் ஆன “சூர்யா - பூஜா ஹெக்டே” ஜோடி மீண்டும் இணைந்தது... இயக்கப்போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏராளமான கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் ஹரி. இவர் நடிகர் சூர்யா நடித்த படங்களைத் தான் அதிகளவு இயக்கி உள்ளார். இவர் கூட்டணியில் இதுவரை வேல், ஆறு, சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் என இதுவரை 5 படங்கள் வந்துள்ளன. இவர்கள் இருவரும் அருவா என்கிற படத்தில் 6-வது முறையாக இணைய இருந்தனர்.

இதையும் படியுங்கள்... இது அருவாவும் இல்லை..சூர்யாவுக்கான கதையும் இல்லை..விஷயத்தை உடைத்த இயக்குனர் ஹரி !

24

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த சமயத்தில் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் அந்த படத்திற்கு ஓகே சொல்ல முடியவில்லை. இதையடுத்து ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இந்த படம் அறிவிப்போடு நின்றுபோனது.

இதையும் படியுங்கள்... நடிகையுடன் வீட்டில் தங்கியிருந்ததால் ஆத்திரம்.. 60 வயது நடிகரை செருப்பால் அடிக்க வந்த மனைவி - பரபரப்பு சம்பவம்

34

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு, நடிகர் சூர்யா உடன் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. சிறுத்தை, வீரம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய சிவா அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Ramya Pandian : காட்டுக்குள் கவர்ச்சி போஸ்... வைரலாகும் இடுப்பழகி ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்

44

இந்த முறை இந்த கூட்டணி நிச்சயம் இணையும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்மூலம் சூர்யாவும், பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories