ஜெயலலிதாவுக்கு சிலம்பம் சொல்லிக்கொடுத்த ‘வாத்தியார்’! திரையில் தமிழன் வீரத்தை மீட்டெடுத்த புரட்சித் தலைவர்!

Published : Feb 26, 2026, 01:20 PM IST

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்கள் மூலம் சிலம்பம், மற்போர், சுருள்வாள் வீச்சு போன்ற தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளை ஆவணப்படுத்தினார். இதன் மூலம், அவர் தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திய ஒரு ஆசானாக விளங்கினார்

PREV
15
வீரத்தை ஊட்டி வளர்த்த எம்ஜிஆர்

தமிழ் திரையுலகின் வரலாற்றில் சண்டைக் காட்சிகள் என்பது வெறும் ஹீரோயிசத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட காலம் உண்டு. ஆனால், அந்தச் சண்டைக் காட்சிகளையே ஒரு கலைப் பொக்கிஷமாக மாற்றி, தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களையே சாரும். வெறும் பொழுதுபோக்காக இருந்த சினிமாவை, தமிழன் தற்காப்பு கலைகளின் பாடசாலையாக மாற்றிய அந்த வரலாற்றுச் சுவடுகளை இங்கே காண்போம்.

25
அரங்கத்தை அதிரவைத்த ‘முகராசி’ பயிற்சி!

"வாத்தியார்" என்ற அடைமொழிக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் எவ்வளவு பொருத்தமானவர் என்பதற்கு ‘முகராசி’ திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம். அப்படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் சிலம்பம் பயிற்றுவிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். வெறும் நடிப்புக்காகச் சில அசைவுகளைச் செய்யாமல், ஒரு குரு சீடனுக்குக் கற்றுக்கொடுப்பது போன்ற நேர்த்தியுடன் அந்தப் பயிற்சி அமைந்திருக்கும். பெண்களும் தற்காப்புக் கலையைக் கற்க வேண்டும் என்பதை அன்றே திரையில் உரக்கச் சொன்ன புரட்சித் தலைவரின் அந்தத் தொலைநோக்குப் பார்வை, இன்றும் ரசிகர்களைப் பிரமிக்க வைக்கிறது.

35
சிலம்ப வரிசைகளின் களஞ்சியம்

எம்.ஜி.ஆர் அவர்கள் திரையில் கையாண்ட ஒவ்வொரு சிலம்ப அசைவும் ஒரு குறிப்பிட்ட வரிசையைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தாயைக் காத்த தனயன்

இதில் அவர் கையாண்ட ‘ஐயங்கால் வரிசை’ முறையும், அவருக்கு எதிராகச் சாண்டோ சின்னப்ப தேவர் கையாண்ட ‘கூடல் ஒளிவு’ முறையும் சிலம்பப் பிரியர்களிடையே இன்றும் பேசப்படும் ஒரு நுணுக்கமான போர் முறை.

குலேபகவாலி

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் ‘கருட வரிசை’யைக் கையாள, சின்னப்ப தேவர் ‘நாகப் பதினாறு’ வரிசையைப் பயன்படுத்தி மிரட்டியிருப்பார்.இப்படித் திரையில் நுணுக்கமான அடிமுறைகளை ஆவணப்படுத்தியதன் மூலம், அழிந்து கொண்டிருந்த பல சிலம்ப வரிசைகளை அவர் அழியாமல் காத்தார்.

45
மறக்கப்பட்ட போர்க்கலைகளின் மீட்பர்

சிலம்பம் மட்டுமின்றி, தமிழர்களின் பல்வேறு வீர விளையாட்டுகளுக்குத் திரையில் புது ரத்தம் பாய்ச்சினார் மக்கள் திலகம். சக்கரவர்த்தித் திருமகன் படத்தில் மற்போர், ரிக்சாக்காரன் படத்தில் காண்போரைக் கண் இமைக்க விடாத சுருள்வாள் வீச்சு. உழைக்கும் கரங்கள் படத்தில் தமிழர்களின் ஆதி ஆயுதமான ‘மடுவு’ (மான்கொம்பு) சண்டை. இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய போர்க்கலையை அறிமுகப்படுத்தி, இளைஞர்களிடையே வீர விளையாட்டுகள் மீதான ஆர்வத்தைத் தூண்டினார்.

55
‘வாத்தியார்’ சொல்லிக்கொடுத்த பாடம்

எம்.ஜி.ஆர் அவர்கள் வெறும் வசூலுக்காகப் படம் எடுக்கவில்லை; தன் இனத்தின் பெருமையைச் சொல்லும் ஆவணங்களாகத் தன் படங்களை மாற்றினார். அவர் திரையில் சுழற்றிய கம்பு, தமிழன் வீரத்தின் அடையாளம். அந்த ‘வாத்தியார்’ சொல்லிக்கொடுத்த பாடம், இன்றும் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலம்பக் கலைக்கூடங்களாகப் பூத்துக் குலுங்குகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories