சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானை தான் காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும் நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.
தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை மோகினி. தமிழ், மலையாளம் என பல மொழிகளில் சிறந்த திரைப்படங்களில் நடித்தவர். 1987-ல் தமிழில் வெளியான கூட்டுப் புழுக்கள் என்கிற படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 1991-ம் ஆண்டு இவர் நடித்த ஈரமான ரோஜாவே படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் சின்ன மருமகள், உடன் பிறப்பு, கண்மணி, ஜமீன் கோட்டை போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். 2000-க்குப் பிறகு சினிமாவில் அதிகம் காணப்படாத மோகினி, திருமணம் செய்துகொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
24
திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன்
இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் குறித்து மோகினி கூறிய சில விஷயங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. அந்தக் காலத்தில் தனக்கு ஏ.ஆர். ரகுமானை மிகவும் பிடித்திருந்ததாகவும், அவர் மதம் மாறியது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறிய மோகினி, ரகுமானை ஒரே ஒரு முறை மட்டுமே நேரில் பார்த்ததாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
34
ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மோகினி
அவர் கூறியதாவது : "நான் ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகை, வெறித்தனமான அன்பு என்றே சொல்லலாம். ஏ.ஆர். ரகுமான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது எனக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். திலீப் என்ற பெயரே போதுமானதாக இருந்தது, மதம் மாறியிருக்க வேண்டாம். வீட்டில் எனக்குப் பிடித்திருக்கிறது, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்வதற்கு வசதியாக இருந்திருக்கும். சண்டை சச்சரவு இல்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என்றெல்லாம் மனதில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் என்னை விட மிகவும் இளையவர் என்பதும் எனக்குத் தெரியும்," என்று மோகினி கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது : "ஒரே ஒரு முறை மட்டுமே எனக்கு ரகுமானை நேரில் பார்க்க முடிந்தது. மலேசியாவில் நடந்த அவருடைய முதல் இசை நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன். சுமார் நாற்பதாயிரம் பேர் கலந்துகொண்ட பிரம்மாண்டமான நிகழ்ச்சி அது. நிகழ்ச்சி முடிந்து நாங்கள் விமானத்தில் திரும்பும்போது சுமார் இருபத்தைந்து கலைஞர்கள் இருந்தோம். நான் என் பையை வைத்துவிட்டு அமரத் தயாரானபோது ரகுமான் சார் அங்கே வந்தார். யாரிடமும் எதுவும் பேசவில்லை, ஆனால் நேராக என் அருகில் வந்து ஹலோ சொன்னார். அதைக் கேட்டதும் அனைத்து கலைஞர்களும் என்னைத் திரும்பிப் பார்த்தனர். ஹலோ சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்," என்று மோகினி கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.