Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு

Published : Feb 26, 2026, 10:34 AM IST

அய்யனார் துணை சீரியலில் ராகவ்வுக்கு மெசேஜ் அனுப்பிய சோழனுக்கு வீட்டுக்கு வந்து செம டோஸ் கொடுத்துள்ள நிலா, டைவர்ஸ் பற்றி முக்கிய முடிவெடுத்துள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் பொங்கல் பண்டிகையை பாண்டி உடன் சேர்ந்து கொண்டாடிய வானதி, அவரிடம் முக்கிய விஷயம் ஒன்றையும் சொல்லி இருக்கிறார். நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என சொன்ன வானதி, உடனே தன் வீட்டில் வந்து பெண் கேட்குமாறு சொல்கிறார். ஆனால் அதற்கு தயக்கம் காட்டும் பாண்டியன், கல்யாணம் ஆனால் தங்க தனி ரூம் கூட இல்லை அதனால் தான் யோசிக்கிறேன் என கூறுகிறார். அப்போ உங்க நிலா அண்ணியை வெளிய அனுப்பிட்டு அந்த ரூமை எடுத்துக்கலாம் என கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
கிஸ் கொடுக்கும் வானதி

அதுமட்டுமின்றி சேரனிடம் சொல்லி தன் வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதால், இன்று வீட்டுக்கு பேச வருமாறு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் வானதி. பாண்டியன் தன்னுடைய கடையில் சோகத்துடன் அமர்ந்திருக்க, அப்போது அங்கு செல்லும் வானதி, இன்னைக்கு ஈவினிங் நான் உன்னைய சர்ப்ரைஸ் பண்ணப்போறேன். அதேமாதிரி நீயும் என்னைய சர்ப்ரைஸ் பண்ணு என கூறுகிறார். இப்படி தன் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு செல்லும் வானதி கிளம்பும் போது பாண்டியனுக்கு கிஸ் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

35
எஸ்கேப் ஆன பல்லவன்

மறுபுறம் பல்லவன் கல்லூரியை கட் அடித்துவிட்டு, தன் காதலி காயத்ரியை அழைத்துக் கொண்டு, சினிமாவுக்கு கிளம்பி சென்றுகொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சோழன் அந்த வழியாக வருகிறார். அவரை முதலில் பார்க்கும் காயத்ரி, பல்லவனிடம் சொல்ல, அவரோ, காயத்ரியை அழைத்துச் சென்று ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கிறார். ஏன் உங்க அண்ணனை பார்த்து பயப்படுற என காயத்ரி கேட்க, பயமெல்லாம் இல்ல, இப்ப கூட நான் என்னோட அண்ணன் முன்னாடி போய் இதுதான் என்னோட ஆளுனு சொல்லிடுவேன். ஆனால் உனக்கும் என் அண்ணனுக்கும் ஆகாது அதான் உன்னைய தனியா அழைச்சிட்டு வந்துட்டேன் என கூறுகிறார்.

45
சோழனை திட்டும் நிலா

இதற்கு அடுத்த சீனில் நிலா வீட்டுக்கு வருகிறார். அப்போது சோழன், பாண்டியனுக்கு பொண்ணு பார்க்க போவதற்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறார். அப்போது சோழனை ரூமுக்குள் இழுத்து செல்லும் நிலா, அவருக்கு செம டோஸ் கொடுக்கிறார். ஏனெனில் நிலாவின் போனில் இருந்து ராகவ்வை திட்டி சோழன் மெசேஜ் அனுப்பிய விஷயம் நிலாவுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் தான் சோழனை திட்டுகிறார். அதன்பின்னர் வெளியே வரும் நிலாவிடம் என்னமா பிரச்சனை என சேரன் கேட்க, நிலா நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார்.

55
டைவர்ஸ் எப்போ?

பர்ஸ்ட் பாண்டியனுக்கு கல்யாணம் நடக்கட்டும், அதுக்கப்புறம் உங்களுக்கும் சந்தாவுக்கும் கல்யாணம் நடக்கட்டும், அது முடிந்ததும் நான் இந்த வீட்டுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சோழனுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போயிடுறேன் என சொல்கிறார். இதைக்கேட்ட சோழன் மனமுடைந்து போகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? பாண்டியனுக்கு திட்டமிட்டபடி கல்யாணம் நடக்குமா? நிலாவும் சோழனும் டைவர்ஸ் பெற்ற பின்னர் நிலா வீட்டை விட்டு சென்றுவிடுவாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories