Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்

Published : Feb 26, 2026, 08:37 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி பிசினஸை மீண்டும் தொடங்க அவருக்கு ஒரு செம ஆஃபர் கிடைத்துள்ளது. இதற்கு சக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரை எந்தவித பிரச்சனையிலும் சிக்கவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறார் சக்தி. இதற்காக அவர் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறார். அவர் மன நிம்மதியோடு இருந்தால் தான் குழந்தை எந்தவித பிரச்சனையும் இன்றி பிறக்கும் என்று டாக்டர் கூறி இருந்தார். ஆனால் ஜனனி, தனக்கு நடந்த அநியாயங்களை நினைத்து ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க, அப்போது அவரை சந்திக்க இருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கள் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

25
மீண்டும் தமிழ் சோறு பிசினஸா?

ஜனனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை நடத்தி வந்தார். அதில் போதைப் பொருள் விற்கப்படுவதாக பொய் புகார் கொடுத்து அந்த கடையையே தூக்கிவிட்டார்கள். இதனால் அவர்களின் பிசினஸ் இழுத்து மூடப்பட்டது. பின்னர் ஜனனி கர்ப்பமானதால் இனி அந்த பிசினஸ் அவ்வளவுதான் என்று இருந்த நிலையில், வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் ஜனனியை அழைத்து, அவர்களின் தமிழ் சோறு சாப்பாட்டுக்கு நாங்கள் அடிமை என்று கூறியதோடு, எதனால் தற்போது கடையை எடுத்துவிட்டீர்கள் என விசாரிக்கிறார்கள். நந்தினியும் எல்லாவற்றையும் சொல்கிறார்.

35
ஜனனியை எதிர்க்கும் சக்தி

அதன்பின்னர் அந்த நபர் தான் ஒரு தொழிலதிபர் என்பதால், உங்களுடைய ஃபுட் டிரக் பிசினஸில் நான் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன். அதனால் நீங்கள் மீண்டும் அந்த தொழிலை தொடங்குமாறு கூறுகிறார். இதைக்கேட்ட ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அப்போது குறுக்கிட்ட சக்தி, அவர்களிடம் இந்த பிசினஸ் எல்லாம் பண்ற ஐடியா இல்ல நீங்க கிளம்புங்க என வந்தவர்களை விரட்டுகிறார். இந்த ஃபுட் டிரக் பிசினஸை மீண்டும் தொடங்கினார் ஜனனிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில் அவர் இப்படி பேசுகிறார்.

45
பஞ்சாயத்துக்கு வந்த கதிர் - ஞானம்

அந்த தொழிலதிபர் சக்தியிடம் அவசரப்பட்டு ஏன் வேண்டாம்னு சொல்றீங்க என கேட்கிறார். அதற்கு அவர், சொல்லிக்கிட்டே இருக்கேன் வேணாம்னு திரும்ப அதையே பேசிக்கிட்டு இருக்கீங்க. கிளம்புங்க சார் என சொன்னதும் அவர்கள் கிளம்பி செல்கிறார்கள். பின்னர் சக்தியையும் ஜனனியையும் நந்தினி மற்றும் ரேணுகா மாடிக்கு அழைத்து செல்கிறார்கள். அப்போது கீழே இருந்த கதிரும், ஞானமும் மேலே சென்று என்ன ஆச்சு என கேட்கிறார்கள். நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என ரேணுகா கேட்க, என் தம்பிக்கு ஏதாவது பிரச்சனைனா நாங்க வந்து கேட்போம் என கூறுகிறார் ஞானம். பின்னர் சக்திக்கு அனைவரும் சேர்ந்து அட்வைஸ் பண்ணுகிறார்கள்.

55
அப்பாவின் சதியை கண்டுபிடித்த தர்ஷினி

இதையடுத்து ஜனனியை ரூமுக்கு அழைத்து சென்ற நந்தினி, ரேணுகா மற்றும் தர்ஷினி ஆகியோர் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆதி குணசேகரனைப் பற்றி பேசும் தர்ஷினி, அவர் தான் உள்ள உட்கார்ந்து எல்லாரையும் பக்காவா வழிநடத்திகிட்டு இருக்காரு. காலையில் இருந்து வெளியவே வரல அவர், அதையெல்லாம் நோட் பண்ணுணீங்களா என கேட்கிறார். ஆதி குணசேகரன் கதிரையும் ஞானத்தையும் மனைவிகளுடன் சேர்க்க பிளான் போட்டிருக்கும் நிலையில், போகிற போக்கை பார்த்தால், சக்தியும் ஜனனியும் சண்டைபோட்டு பிரிந்துவிடுவார்கள் போல தெரிகிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories