Siragadikka Aasai : சிந்தாமணியின் சகுனி வேலையால் பயந்து நடுங்கும் விஜயா... மீனாவின் பிளான் சக்சஸ் ஆகுமா?

Published : Feb 26, 2026, 09:38 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தன்னுடைய மன திருப்திக்காக வேறு ஒரு ஜோசியரை வீட்டுக்கு வர வைத்து அவரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டே துரத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு, ஒரு போலி பெண் சாமியாரை ஏவிவிட்டு, விஜயாவின் வீட்டிற்கு சென்று மீனாவால் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லச் சொல்கிறார். அந்த பெண் சாமியாரும் சிந்தாமணி சொன்னபடி சொன்னதோடு, மீனா வீட்டில் இருந்தால் உன்னுடைய தாலி நிலைக்காது என விஜயாவிடம் சொல்ல, அதைக்கேட்டு மிரண்டு போன விஜயா, இதையெல்லாம் சிந்தாமணியிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
கோவிலுக்கு செல்லும் விஜயா

விஜயாவின் புலம்பலைக் கேட்ட சிந்தாமணி அவர் மிகவும் பயந்துபோய் இருப்பதை கண்டுபிடித்துவிடுகிறார். இதையடுத்து அவரை கிளம்பி தான் சொல்லும் கோவிலுக்கு வருமாறு கூறுகிறார். அங்கு வந்த விஜயாவிடம், நான் அந்த சாமியாரைப் பற்றி விசாரித்தேன். அவங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம். அவர் எது சொன்னாலும் நிச்சயம் நடக்குமாம் என்று சொல்ல, விஜயாவுக்கு மேலும் பயம் தொற்றிக் கொள்கிறது. இதையடுத்து விஜயாவை அழைத்துக் கொண்டு கோவிலில் அந்த பெண் சாமியார் அருள்வாக்கு சொல்லும் இடத்துக்கு அழைத்து செல்கிறார் சிந்தாமணி. அங்கு வரிசையாக உட்கார்ந்து பெண்கள் அவரிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள்.

35
பயமுறுத்திய சிந்தாமணி

அப்போது அங்கு இருந்த பெண்கள் எல்லாம் நீங்க சொன்னது அப்படியே நடந்திருச்சும்மா என்று சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் சிந்தாமணி செட் பண்ணிய ஆட்கள் என்பதை அறியாத விஜயா, அதை உண்மை என நம்பி விடுகிறார். இதனால் விஜயாவுக்கு மேலும் பயம் அதிகரிக்கிறது. பின்னர் எப்படியாவது அந்த மீனாவை வீட்டை விட்டு அனுப்பும் வழியை பாருங்க மாஸ்டர் என சொல்லி விஜயாவை அனுப்பி வைக்கிறார் சிந்தாமணி. பின்னர் அந்த பெண் சாமியாரை கோவிலில் மறைமுகமாக உள்ள ஒரு இடத்துக்கு அழைத்து செல்லும் சிந்தாமணி, அவருக்கு பணத்தை கொடுக்கிறார்.

45
ஜோசியம் பார்க்கும் மீனா

இதையடுத்து மீனா தன்னுடைய அம்மாவீட்டுக்கு செல்கிறார். அங்கு வீட்டில் பெண் சாமியார் சொன்ன விஷயங்களை எல்லாம் மீனா சொல்ல, அதற்காக மீனாவின் அம்மா, வேறு ஒரு ஜோசியக்காரரை அங்கு வர வைத்து அவரிடம் மீனாவின் ஜாதகத்தை பற்றி விசாரிக்கிறார். அந்த ஜோசியக்காரர், எந்த ஒரு ராசியாலும் யாருடைய உயிரும் போகாது நீங்க பயப்படாதீங்க என சொல்லிவிட்டு, மீனாவின் ஜாதகத்தை பார்த்து, அந்த வீட்டில் ஒரு கெட்டது நடக்கப்போகிறது என்று ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார். இதற்கு ஏதாச்சும் ப்ரிகாரம் இருக்கா ஐயா என மீனா கேட்க, அவரும் பரிகாரத்தை சொல்கிறார்.

55
பரிகாரம் செய்ய சொன்ன ஜோசியர்

வீட்டில் இழுப்பை இலையை வைத்து உன்னுடைய மாமியாரை சுமங்கலி பூஜை பண்ண சொல்லு என கூறிவிட்டு செல்கிறார் அந்த ஜோசியக்காரர். இதையெல்லாம் கேட்ட மீனா, தான் சொன்னால் தன்னுடைய மாமியார் கேட்பாரா என்கிற பயத்தில் இருக்கிறார். இதனால் பார்வதி மூலம் இந்த விஷயத்தை விஜயாவிடம் சொல்லிவிடலாம் என முடிவெடுக்கிறார். மீனா பார்வதியை சந்திக்க செல்லும் முன், விஜயா, பார்வதி வீட்டுக்கு சென்றிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories