இதற்காகத்தான் தனுஷின் அப்பா கோபப்பட்டாராம்..காரணத்தை கண்டறிந்த ரசிகர்கள்

Published : Oct 08, 2022, 02:23 PM ISTUpdated : Oct 08, 2022, 03:58 PM IST

ஏன் பழைய விஷயத்தை கிளற வேண்டும் என்பதற்காகத்தான் கஸ்தூரிராஜா செய்தியாளர்களிடம் கோபப்பட்டார் என தனுஷின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

PREV
15
இதற்காகத்தான் தனுஷின் அப்பா கோபப்பட்டாராம்..காரணத்தை கண்டறிந்த ரசிகர்கள்

ஒருவரான தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும்,  தனுஷும் 18 வருடங்களுக்கு முன்னர் காதல் கரம் பிடித்தனர். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

25

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் இத்தனை வருடம் கழித்து இருவரும் பிரிவது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். உறவினர்கள், நண்பர்கள் என  பலரும் அட்வைஸ் கொடுத்தும்  எதையும் கேட்காமல் முரண்டு பிடித்து வந்தனர் தனுஷும் - ஐஸ்வர்யாவும்.

மேலும் செய்திகளுக்கு... அடுத்தடுத்து தோல்வியை தழுவிய படங்கள்...சுமார் 2000 கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள்

35
dhanush

இதை அடுத்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்தார். அதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம், இயக்கம் என தனது பாதையை தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே அவ்வப்போது தனது பிள்ளைகளுக்காக சந்தித்து வந்தனர் இந்த ஜோடிகள். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைக் கூட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நினைவாக தான் தனுஷ் எடுத்ததாகவும், அதன் பாடல் வரிகள் அனைத்தும் ஐஸ்வர்யாவிற்காகவே எனவும் தனுஷின் ரசிகர்கள் கூறி வந்தனர்.

45

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைந்து வாழ்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்த ஜோடிகள் நல்ல முடிவை எடுக்க சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...அஜித்தின் துணிவு படத்தில் இணைந்துள்ள பிக்பாஸ் பாவனி - அமீர்...தீயாய் பரவும் டீம் போட்டோஸ் இதோ

55

இந்த செய்தி வெளியான பிறகு, முன்பு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பத்திரிகையாளர்களிடன் கோபப்பட்டது குறித்த காரணத்தை நெட்டிசன்களில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நல்லவிதமான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாள், ஏன் பழைய விஷயத்தை கிளற வேண்டும் என்பதற்காகத்தான் கஸ்தூரிராஜா செய்தியாளர்களிடம் கோபப்பட்டார் என தனுஷின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories