கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி, பெற்றோர் சம்மதத்துடன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று வந்த நட்சத்திர ஜோடி, இந்தியா வந்து மீண்டும் தங்களுடைய சினிமா பணிகளில் கவனம் செலுத்த துவங்கினர். அந்த வகையில் நயன்தாரா 'ஜவான்' படப்பிடிப்பிலும், விக்னேஷ் சிவன் ஒலிம்பியாட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் முழு கவனம் செலுத்தி, அதனை வெற்றிகரமாக செய்து முடித்தார்.
nayanthara - vignesh shivan
இருவரும் தங்களுடைய பணியை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாவது ஹனி மூனுக்காக, ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற நிலையில், அங்கேயே தங்கி... அடுத்ததாக அஜித்தை வைத்து இயக்க உள்ள படத்திற்காக விக்னேஷ் சிவன் லொகேஷன் பார்த்ததாகவும் தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: அவ ஒரு சைக்கோ சார்...ஆதாரங்களை அள்ளி வீசும் சீரியல் நடிகையின் கணவர்
இதை தொடர்ந்து திருமணத்திற்கு பின்னர் காதல் கணவர் பிறந்த நாளை, மாமியார், நாத்தனார் போன்ற குடும்ப உறவினர்களுடன் துபாயில் கலக்கலாக செலிபிரேட் செய்த நயன், விரைவில் சினிமா துறையில் இருந்து முழுமையான விலகி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
மேலும் தான் நடிக்கும் படங்களில் கழுத்தில் இருக்கும் தாலியை எக்காரணத்திற்காகவும் கழட்ட மாட்டேன் என நிபந்தனையோடு தான் நடித்ததாகவும் கூறியுள்ளார். நயன்தாரா குழந்தை பெற்று கொள்வது குறித்து மருத்துவரை அணுகியுள்ளதால்... விரைவில் ரசிகர்களுக்கு நல்ல சேதி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.