பிரபாஸ் நடித்த 'தி ராஜா சாப்' திரைப்படம் முதல் நாளிலேயே ரூ. 112 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட தொடக்கத்தைப் பெற்றது. மூன்று நாட்களில் ரூ. 160 கோடி வசூலித்த போதிலும் எதிர்மறை விமர்சனங்களால் படம் லாபத்தை எட்டுமா என்ற சவாலை எதிர்கொண்டுள்ளது.
பான் இந்திய நட்சத்திரமான பிரபாஸின் 'வின்டேஜ் லுக்' மற்றும் ஹாரர் - காமிக் ஜானர் என்பதால் இப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 112 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கை பதிவுகளுடன் படம் மிக வலிமையான தொடக்கத்தைப் பெற்றது. இது பிரபாஸின் பாக்ஸ் ஆபீஸ் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது.
24
3 நாட்களில் உலகளாவிய வசூல் நிலவரம்
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் வேகம் சற்றே குறைந்தாலும், 3 நாட்களின் முடிவில் வசூல் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 3 நாட்களில் சுமார் ரூ. 109 கோடி ஈட்டியுள்ளது. வெளிநாட்டு வசூல் மற்றும் இந்திய மொத்த வசூலைச் சேர்த்து 3 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 160 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
34
விமர்சன ரீதியான பின்னடைவு
இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைத் திரட்டினாலும், விமர்சன ரீதியாக படம் பின்தங்கியுள்ளது. குறிப்பாக படத்தின் நீளம் மற்றும் பலவீனமான திரைக்கதை ஆகியவை ரசிகர்களைக் கவரத் தவறிவிட்டன. தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாதது படத்திற்குச் சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.
'தி ராஜா சாப்' திரைப்படம் சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 3 நாட்களில் ரூ. 160 கோடி வசூலித்திருந்தாலும், படம் லாபகரமான நிலையைஅடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. வரும் வார நாட்களில் படத்தின் வசூல் நிலையைப் பொறுத்தே, இது பிரபாஸின் சினிமா பயணத்தில் வெற்றிப் படமாக அமையுமா அல்லது ஏமாற்றமாக முடியுமா என்பது தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.