இது உண்மை சம்பவம் என்று குறிப்பிட்டிருந்ததால் தான் இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ரிலீசுக்கு முன்பே இப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் இப்படம் நாடெங்கும் மே 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன பின்னர் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.