மயோசிடிஸ் பிரச்சனையில் இருந்து சமந்தா மீண்டு வந்த பின்னர், இவர் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான 'சாகுந்தலம்' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மரண அடி வாங்கிய நிலையில், தோல்வி படம் குறித்து பெரிதாக அலட்டி கொள்ளாமல், அடுத்தடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.
'சிட்டாடெல்' வெப் தொடர் ஆங்கிலத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ந் தேதி ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா இந்த தொடரின் இந்திய பதிப்பில் நடித்து வருவதால், இந்த வெப் தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமந்தா, ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மிகவும் ஸ்டைலிஷான லாங் மேக்சி அவுட் பிட்டில் புல்வெளியில் படுத்திருக்கும் ஒற்றை புகைப்படத்தை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.